»   »  லிப் டூ லிப் எதிரொலி: மகளின் காதலை அத்துவிட்டு 'பாய்' பிரண்ட்ஸுக்கு தடா போட்ட ஸ்ரீதேவி?

லிப் டூ லிப் எதிரொலி: மகளின் காதலை அத்துவிட்டு 'பாய்' பிரண்ட்ஸுக்கு தடா போட்ட ஸ்ரீதேவி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: காதலரை பார்க்கக் கூடாது, எந்த ஆண் நண்பர்களும் இருக்கக் கூடாது என்று மூத்த மகள் ஜான்விக்கு நடிகை ஸ்ரீதேவி கன்டிஷன் போட்டுள்ளாராம்.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பார்க்க தனது தாய் போன்றே மிகவும் அழகாக உள்ளார். அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் முயன்று தோல்வி அடைந்தனர்.

இந்நிலையில் ஜான்வி பாலிவுட் படத்தில் ஹீரோயின் ஆகியுள்ளார்.

 வருண் தவான்

வருண் தவான்

வருண் தவான் அடுத்த ஆண்டு நடிக்க உள்ள படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஜான்வி. ஏகப் போட்டி உள்ள பாலிவுட்டில் நுழையும் அவர் அமெரிக்காவில் முறைப்படி நடிப்பு பயின்று வருகிறார்.

 லிப் டூ லிப்

லிப் டூ லிப்

ஜான்வி தனது காதலரான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி தீயாக பரவியது.

 ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

பாலிவுட்டில் நிலைக்க வேண்டும் என்றால் நல்ல பெயர் இருக்க வேண்டும். இதில் பாலிவுட்டில் நுழையும் முன்பே இப்படி லிப் டூ லிப்பா என்று ஸ்ரீதேவி தனது மகள் மீது கோபப்பட்டாராம்.

 காதல்

காதல்

ஷிகர் பஹாரியாவை இனி பார்த்து பேசக் கூடாது. இனி உனக்கு எந்த ஆண் நண்பர்களும் இருக்கவே கூடாது. எது செய்தாலும் என்னை கேட்டுத் தான் செய்ய வேண்டும் என ஜான்விக்கு ஸ்ரீதேவி கன்டிஷன் போட்டுள்ளாராம்.

English summary
Actress Sridevi has reportedly asked her elder daughter Jhanvi Kapoor not to see her lover and not to have any male friends.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil