நீ என்ன வேணா சொல்லிக்கோ நான் மரியாதையே கொடுக்க மாட்டேன்.. பிக் பாஸ் இளம் பெண்களின் அட்ராசிட்டி
பிக்பாஸில் பங்கேற்றுள்ள இளம் பெண்கள் தன்னுடைய பெரிய அண்ணன் வயது, தந்தை வயது உடைய போட்டியாளர்களை பெயர் சொல்லி அழைப்பதால் போட்டியாளர்கள் வருத்தம் அடைந்து வருகின்றனர்
பேர் சொல்லி கூப்பிட தானே பெயர் வைத்துள்ளது. பின்னர் எப்படி கூப்பிடுவோம் என்று பெண் போட்டியாளர்கள் கேட்கின்றனர்.
ஆரம்பத்தில் அண்ணன் என்று அழைத்து வந்தவர்கள் நாளாக நாளாக பேர் சொல்லி அழைக்கிறீர்கள் என்று ஏடிகே, அசீம் போன்றோர் கேட்கின்றனர்.

போலி உறவுகள் 6 வது சீசனிலும் மாறவில்லை
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பல்வேறு மட்டங்களிலிருந்து வருவார்கள். அவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் திரைத்துறை, சின்னத்திரையை சார்ந்தவர்களாக சமுதாயத்தின் மேல்மட்ட இடத்தில் இருந்து வருபவர்களாக இருப்பார்கள். போலித்தனமான உறவு, செல்லமாக பெயரிட்டு அழைப்பது, வாடா போடா என்று கொஞ்சி கொள்வது எல்லாம் இருக்கும். சகஜமாக பழகுவது என்பது இருக்கவே இருக்காது.

கண்ணீர் விட்டு அழுத ஏடிகே
இந்த முறை பிக் பாஸ் வீட்டில் இளம் பெண்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. ஆண்களில் பெரும்பாலானோர் 35, 40 வயதை கடந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களில் ஜி.பி.முத்து முதன் முதலில் தனலட்சுமியை நீ வா போ என்று பேசிய போது அவர் பெரும் பிரச்சனையை கிளப்பினார். மகள் வயது உடைய பெண்ணை நீ வா போ என்று சொன்னதை பெரிதாக்குகிறார்கள் என்று ஜிபி முத்து கண்ணீர் விட்டு அழுதார். அதன்பின் தனலட்சுமி இதையே வாடிக்கையாக வைத்துக்கொண்டு அனைவரிடம் வம்பு இழுத்து வந்தார்.

என்னவேணா சொல்லிக்கோங்க பேர் சொல்லித்தான் கூப்பிடுவோம்
மற்றொருபுறம் ஜனனி, நிவாஷினி, குயின்சி, ஷிவின், தனலட்சுமி போன்றோர் தங்களுக்குள் ஒரு அணியாக இருந்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிலேயே மிகுந்த குறைவான வயது உடையவர் ஜனனி. அவருக்கு 21 வயது தான் ஆகிறது. ஜனனி வந்த புதிதில் அவரை சிறு பெண்ணாக அனைவரும் அன்பு காட்டினர். அவரும் போட்டியாளர்களிடம் அவரவர் வயதுக்கேற்றாற்போல் அண்ணன் முறை வைத்து பெயர் சொல்லி அழைத்து வந்தார். நாளாக நாளாக இவை எல்லாம் கறைய தொடங்கியது. மற்ற பெண் போட்டியாளர்களும் சகப் போட்டியாளர்களான வயதுக்கு மூத்தவர்களை அண்ணன் முறையோ அல்லது மரியாதையாக கூப்பிடுவது வாடிக்கையாக வைத்திருந்தனர். ஆனால் நாள் செல்ல செல்ல அவர்களும் பெயர் சொல்லி கூப்பிட ஆரம்பித்தனர்.

ஜனனியிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை குறிப்பிட்டு சொன்ன ஏடிகே
இதைப் பற்றி அசீமும், ஏடிகேவும் ஜனனி, தனலட்சுமி, குயின்சி, நிவாஷினி உள்ளிட்டோர் தன்னிடம் அண்ணன் மாதிரி பேசிக் கொண்டிருந்தனர் ஆனால் நாளாக, நாளாக பேர் சொல்லி அழைக்க ஆரம்பித்துவிட்டனர் என்று சொல்லி வருத்தப்பட்டனர். நேற்றும் தாயம் டாஸ்க்கின் போது ஏடிகே பெயரை சொல்லி ஜனனி நாமினேட் செய்யப்பட்டபோது ஜனனியிடம் வந்த மாற்றங்களை சொல்ல ஆரம்பித்த ஏடிகே ஆரம்பத்தில் வந்த பொழுது என்னை அண்ணன் ஏடிகே என்று அழைத்த நீ இப்பொழுது ஏடிகே என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறாய் என்று வருத்தத்துடன் சொன்னார். இதே நடைமுறையை இளம் பெண் போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர்களிடம் காண்பிக்கின்றனர். நேரடியாக பெயர் சொல்லி அழைக்கின்றனர். அதிலும் ஜனனி கவலைப்படாமல் பேர் சொல்லி கூப்பிடுவதையே வேலையாக வைத்துள்ளார், அதைப்பற்றி கேட்டால் கூப்பிடத்தானே பெயர் வைத்துள்ளது என்று சொல்கிறார்.

மாடர்ன் கலாச்சாரம் பேரைச் சொல்லி மாற்றி மாற்றி அழைப்பது நெருடல் தானே
மாடர்ன் கலாச்சாரத்தில் பெயர் சொல்லி அழைப்பது சாதாரண விஷயம். ஆனால் உள்ளே வந்ததிலிருந்து அப்படி அழைத்து இருந்தால் எங்களுக்கு பெரிதாக நெருடலாக இருந்திருக்காது, ஆனால் கொஞ்ச காலம் அண்ணன் என்று அழைத்துவிட்டு இடையில் பெயர் மட்டும் சொல்லி அழைப்பது நெருடலாக இருக்கிறது என்பது அசீம், ஏடிகே போன்றோர்களின் வாதம். மாற்றி மாற்றி நடப்பது, வயது வித்தியாசம் பார்க்காமல் அழைப்பது அவர்களுக்கு நெருடலை கொடுக்கிறது. இதை சாதாரணமாக பார்த்தால் பேர் சொல்லி அழைப்பது பற்றி அவர்கள் கவலைப்பட கூடாது. மரியாதை கேட்டு வாங்குவது அல்ல, பேர் சொல்லி அழைப்பதால் மரியாதை கெட்டுப் போகப்போவதும் இல்லை.

நாகரீகம் என்கிற போர்வையில் போலித்தனம் இளம் போட்டியாளர்கள் பலகீனம்
ஆனால் வழக்கமாக இல்லாமல் திடீரென பெண் போட்டியாளர்கள் வயதுக்கு மூத்தவர்களை திடீர் திடீர் என நடைமுறைகளை மாற்றி அண்ணன் என்பதும், பின்னர் பெயர் சொல்வதும் உறவுகளை பாதிக்கும் சிக்கல் தான். இதை பெண் போட்டியாளர்கள் தவிர்த்து இருக்க வேண்டும். வந்ததிலிருந்து பெயர் சொல்லி அழைத்து இருந்தால் சிக்கல். ஏற்பட்டிருக்காது முதலில் அண்ணன் என்பது பிறகு பெயர் சொல்வது பின்னர் வாடா போடா என்று சொல்வது என்பதெல்லாம் மேல் தட்டு வர்க்க போலி கலாச்சாரத்தில் சாதாரணமாக இருக்கும், ஆனால் என்னதான் இவர்கள் நாகரீக பழக்கம் கொண்ட சமூக என்று சொல்லி வந்தாலும் இவர்களிடம் அந்த போலித்தனம் இருப்பதை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











