தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை.. இந்த ஏரியாவுல.. காரணம் என்ன தெரியுமா?
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு கிருஷ்ணகிரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார்.
வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் அந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு. நிவேதா தாமஸ் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள தர்பார் படத்திற்கு கடைசி நேரத்தில் திடீ திடீரென பல பிரச்சனைகள் கிளம்பி வருகின்றன.

அனிருத்துக்கு செக்
தர்பார் படத்தில் இசையமைத்த அனிருத், அந்த படத்தில் ஹாலிவுட் கலைஞர்களை பயன்படுத்தியதற்கு எதிராக புதிய பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது.

சிறப்பு காட்சி ரத்து
இந்நிலையில், அடுத்த பிரச்சனையாக கிருஷ்ணகிரியில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிகில் பிரச்சனை
தீபாவளியன்று வெளியான தளபதி விஜய்யின் பிகில் படத்தின் சிறப்பு காட்சி கிருஷ்ணகிரியில் தாமதமாக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வன்முறை வெடித்தது. அதனை தொடர்ந்து சுமார் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவல்துறை கறார்
பிகில் பிரச்சனையை தொடர்ந்து எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கிருஷ்ணகிரி காவல்துறையினர் கறாராக தெரிவித்துள்ளனர்.

அதிக விலை
மேலும், தர்பார் படத்தின் டிக்கெட் விலை ஆயிரம் முதல் அதிகபட்சமாக 5000 வரை விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்ற நிலையில், டிக்கெட் விலையையும் கட்டுப்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











