6ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸாகாது: அப்போ மெர்சல்?
சென்னை: அக்டோபர் 6ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸாகாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு வந்த கையோடு மாநில அரசுகள் கேளிக்கை வரியை விதிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 30 சதவீதம் கேளிக்கை வரி அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் வரிவிதிப்பு 30ல் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 10 சதவீத வரிவிதிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
10 சதவீத வரிவிதிப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நுழைவுக் கட்டணத்தை முறைப்படுத்தாமல் வரிவிதிப்பது தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் வரிவிதிப்பை எதிர்த்து வரும் 6ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸாகாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











