ஜெய் பீம், கர்ணன் படத்திற்கு நோ விருது.. காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு விருதா? கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை படத்திற்கு தேசிய விருது கொடுக்காமல், சர்ச்சைக்குரிய படமான தி காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளதால் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
2021 ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த விருது பட்டியலில் 2021ஆம் ஆண்டுக்கு முன்பு தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் இடம்பெறவுள்ளன.

இதில், சிறந்த படத்துக்கான விருதை ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படமும், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை கடைசி விவசாயி படமும் பெற்றுள்ளது.
அல்லு அர்ஜுன்: புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார், அதே சமயம் கங்குபாய் கதியவாடி மற்றும் கிருதி சனோன் ஆகிய படங்களில் நடித்ததற்காக அலியா பட் மற்றும் கிருத்தி சனோன்ஆகியோர் சிறந்த நடிகைக்கான விருதைப் பகிர்ந்து கொண்டனர்.
தேசிய விருது இல்லை: 2021ஆம் ஆண்டு ஜெய்பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டன. அமேசான் பிரைமில் நேரடியாக வெளியான ஜெய்பீம் படத்தில் இருளர்கள் படும் துயரத்தை இயக்குநர் கண்முன் கொண்டு வந்து காட்டி இருந்தார். இப்படத்தில், ராசாக்கண்ணுவாக மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் உயிரைக் கொடுத்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விருது கிடைக்கவில்லை.
ஏமாற்றம்: அதேபோல, மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் படத்திற்கும், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, மேலும் ஃபஹத் பாசில் நடித்த மலையாளப் படங்களான ஜோஜி, மாலிக், நயாட்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எட்டு மலையாள மொழிப் படங்கள் இறுதிச் சுற்று பரிசீலனைக்கு சென்று இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஒரு படத்திற்கும் விருது கிடைக்கவில்லை.

நர்கீஸ் தத் விருது: விவேக் அக்னிஹோத்தரி இயக்கத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய திரைப்படம் என கடும் விமர்சனத்திற்கு உள்ளான இந்த படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் பலரின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிறந்த நகைச்சுவை: இது குறித்து நெட்டிசன்ஸ்கள் கடுமையான அதிருப்தியை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். ஒரு நெட்டிசன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த படமாக காஷ்மீர் பைல்ஸ் படம் தேர்வாகி இருப்பதை பார்க்கும் போது, நாட்டின் சிறந்த நகைச்சுவை இதுதான் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











