twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பா.ஜ.க எதிர்க்கும் ஜி.எஸ்.டி வசனங்களை நீக்கவேண்டாம் - இயக்குநர் பா.ரஞ்சித் அதிரடி

    By Vignesh Selvaraj
    |

    மதுரை: பல எதிர்ப்புகளையும், தடைகளையும் உடைத்து தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது 'மெர்சல்' திரைப்படம். ரசிகர்களின் கொண்டாட்டத்தால் 'மெர்சல்' படம் பல சாதனைகளை முறியடித்து வருகிறது.

    'மெர்சல்' படத்தில் மத்திய, மாநில அரசுகளை விளாசியிருக்கிறார் விஜய். இந்தப் படத்தில் மத்திய அரசு அண்மையில் அமல்படுத்திய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்த வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

    இந்த வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க வைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன், பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் வசனங்களை நீக்கவேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

    பா.ஜ.க-வினர் எதிர்ப்பு

    பா.ஜ.க-வினர் எதிர்ப்பு

    ஜி.எஸ்.டி பற்றிய உண்மையை அறியாமல் தனது அரசியல் ஆதாயத்திற்காக மக்களிடம் பொய்யான கருத்துகளை 'மெர்சல்' படத்தின் மூலம் நடிகர் விஜய் பரப்பி வருவதாக பா.ஜ.க-வினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஜி.எஸ்.டி குறித்த வசனங்களைப் படத்திலிருந்து நீக்காவிட்டால் திரையரங்குகளில் ஓடவிடமாட்டோம் எனவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    பா.ரஞ்சித் பேட்டி

    பா.ரஞ்சித் பேட்டி

    இந்நிலையில், இன்று மதுரையில் இயக்குநர் பா.ரஞ்சித் 'மெர்சல்' படத்தின் ஜி.எஸ்.டி வசனங்களின் சர்ச்சை குறித்துப் பேசியுள்ளார். அப்போது ரஜினி நடிப்பில் தான் இயக்கிவரும் 'காலா' திரைப்படம் அடுத்த ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஜி.எஸ்.டி வசனங்களை நீக்கவேண்டியதில்லை

    ஜி.எஸ்.டி வசனங்களை நீக்கவேண்டியதில்லை

    'மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க வேண்டியதில்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது மக்களின் கருத்துத் தான். மெர்சல் படத்தில் வரும் காட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள். அந்தக் காட்சிகளை எல்லோரும் ரசித்துப் பார்க்கிறார்கள்' என்றும் அவர் கூறியுள்ளார்.

     இந்துத்வா முயற்சி ஜெயிக்காது

    இந்துத்வா முயற்சி ஜெயிக்காது

    அம்பேத்கர் கொள்கையை சிதைக்கும் இந்துத்வா முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், கல்வி நிலையங்களில் ஜாதிய வேறுபாடுகள் உள்ளது. அவற்றைக் களைய வேண்டும் எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

    ஒன்றிணைய வாய்ப்பில்லை

    ஒன்றிணைய வாய்ப்பில்லை

    நீலம் அமைப்பு சார்பில் மாநாடு நடத்தப்படும் என்றும், மாநாட்டில் கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று பா.ரஞ்சித் தெரிவித்தார். தமிழன் என்ற சொல்லினால் ஒன்றிணைய வாய்ப்பில்லை எனவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 'மெர்சல்' படத்தில் தமிழன் பண்பாடு, தமிழன் ஒற்றுமை சார்ந்த வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    The controversy over the dialogue of the film 'Mersal' is exploding. In this case, 'people support the scenes in Mersal. People are enjoying the scenes of dialogue about GST', said Pa.Ranjith in Madurai today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X