»   »  இந்திப் படங்களுக்கு விதிக்க வேண்டிய வரியை பிராந்திய படங்களுக்கு விதிக்கக் கூடாது! - கமல்

இந்திப் படங்களுக்கு விதிக்க வேண்டிய வரியை பிராந்திய படங்களுக்கு விதிக்கக் கூடாது! - கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்படங்கள் மீதான மத்திய அரசின் 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் நடிகர் கமல் ஹாஸன்.

நாடு முழுவதும் வெளியாகும் இந்திப் படங்களுக்கு விதிக்க வேண்டிய ஒட்டுமொத்தமான வரிவிதிப்பை பிராந்திய மொழிப் படங்களுக்கு விதிக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

No need for GST on regional cinema - Kamal Hassan

மத்திய அரசு நாடு தழுவிய ஜிஎஸ்டி வரிவிதிப்பை அறிவித்துள்ளது. அதில் திரைப்படங்களுக்கான கட்டணத்திலும் 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது நாடு தழுவிய அளவில் திரைத் துறையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் எதிர்ப்பை தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரி சினிமாவுக்குப் பொருந்தாது, திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று பிலிம்சேம்பரில் நடிகர் கமல் ஹாஸன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "மாநில மொழிப் படங்களுக்கு நாடு தழுவிய ஒரு வரியை விதிப்பது எப்படி பொருந்தும்? வேண்டுமானால் நாடு முழுவதும் வெளியாகும் இந்திப் படங்களுக்கு இந்த வரியை விதிக்கலாம். ஆனால் பிராந்திய மொழிப் படங்களுக்குப் பொருந்தாது. தேவையுமில்லை.

ஜிஎஸ்டியோடு நிற்பதில்லை. வருமான வரியும் சேரும்போது எங்கேயோ போய் நிற்கும். இதை பிராந்திய மொழிப் படங்களால் தாங்க முடியாது," என்றார்.

English summary
Actor Kamal Hassan says that there is no need for GST on regional cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil