twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படத்துக்கு ஹீரோயின் இருந்தாதான் பிரச்சினையே... அதிர வைத்த ராதாரவி!

    By Shankar
    |

    ஷங்கர் இயக்கி 1994 ஆம் ஆண்டு வெளிவந்த காதலன் படத்தில் வடிவேலு பேசும் ஜில் ஜங் ஜக் வசனம், அன்று இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது .அதே ஷங்கரின் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சித்தார்த் இப்போது நடிக்கும் ஒரு படத்துக்கு 'ஜில் சங் சக்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

    அதிலும் இந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகும் அந்தப் படத்தின் தயாரிப்பாளரே சித்தார்த்தான் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

    No need for heroines, says Radharavi

    எட்டாக்கி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சித்தார்த் தயாரித்து கதாநாயகனாக நடிக்க, அவருடன் அவினாஷ் ரகுதேவன், சனந்த் ஆகிய இரு இளைஞர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    மூவரும் பாத்திரப் பெயர்களான நாஞ்'ஜில்' சிவாஜி, 'ஜங்'குலிங்கம் , ஜாகுவார் 'ஜக்'கின் சுருக்கம்தான் தலைப8்பு.

    இவர்களுடன் ரோலெக்ஸ் ராவுத்தர் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்திரத்தில் கலக்கி இருக்கிறார் ராதாரவி. தவிர ''ஷூட் த குருவி'' என்ற பாடலின் சில வரிகளை பாடியும் இருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியே இல்லை என்பது குறிப்பிடத்தக்க வித்தியாசம்.

    இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார், பல குறும்படங்களை இயக்கிய தீரஜ் வைத்தி . இசை விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு கர்ட்ஸ் ஸ்நீடர்.

    படத்தின் பாடல்களை சித்தார்த், இசை அமைப்பாளர்கள் அனிருந், சந்தோஷ் நாராயணன், நடிகை ஆண்ட்ரியா என்று பல பிரபலங்கள் பாடி இருக்கிறார்கள்.

    இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட இந்தப் படத்தின் ஃ பர்ஸ்ட் லுக் டீசரும், பல முன்னணி நடிகர்கள் வெளியிட்ட இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களும் யூ டியூபில் லைக்குகளை அள்ளிக் குவித்துக் கொண்டு இருக்கின்றன.

    இப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

    நடிகர் சங்க தேர்தல் கலாட்டாக்களுக்குப் பிறகு முதல் முறையாக செய்தியாளர்கள் மத்தியில் மைக் பிடித்தார் ராதா ரவி. அவரை எங்கள் யூத் ஐகான் என்ற அடைமொழியோடு பேச அழைத்தார் சித்தார்த்.

    வழக்கம் போல தனது கலகலப்பான பேச்சால் விழாவை நகைச்சுவையால் அதிர வைத்தார் ரவி.

    "பொதுவா நான் எதுக்கும் பயப்படாதவன். ஆனா இந்த பெருமழையில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பார்த்து நான் அசந்துட்டேன். ஆனா நம்ம சித்தார்த் இந்த பெருமைழையில், எந்த விளம்பர வெளிச்ச எதிர்ப்பார்ப்பும் இல்லாம, கடலூருக்குப் போய்..... தனி ஆளா அவ்வளவு நிவாரண உதவிகள் செய்தார். அந்த மனசு யாருக்கு வரும்?

    நான் சித்தார்த்தை ஏதோ தெலுங்குப் பையன்னே நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அவரு நம்ம ஆளு என்பதில் ரொம்ப சந்தோசம்.

    பொதுவா நான் வருஷம் ஏதாவது ஒரு நல்ல படத்துக்கு சம்பளம் வாங்காம வேலை செய்யறது வழக்கம். இந்தப் படத்துக்கு அப்படி செய்யலாம்னு பார்த்தேன். ஆனா தம்பி சித்தார்த் வற்புறுத்தி சம்பளம் கொடுத்துட்டார் .

    இந்தப் படத்துல கதாநாயகியே இல்லை என்பது ஒரு குறையே இல்லை. ஹீரோயின் இல்லாமலே படம் பிரம்மாதமா வந்து இருக்கு. இப்பல்லாம் கதாநாயகி இருந்தாதான் பிரச்னை.

    ஏன்னா, இந்த மாதிரி பிரஸ் மீட்டுக்கு கூப்பிடனும். அது வந்து கால் மேல கால் போட்டு உட்காரும். அதை ஒருத்தர் விவகாரமா போட்டோ புடிச்சு போடுவார். அதைப் பார்த்து மகளிர் சங்கங்கள் கொதிக்கும். கடைசியில சித்தார்த் வீட்டு வாசல்ல வந்து கோஷம் போடுவாங்க.

    ஆனா இப்ப அந்த பிரச்னை எல்லாம் வராது பாருங்க.

    இந்த படத்துல என்னை ஒரு பாட்டு பாட வச்சுட்டாங்க. நான் சும்மா படிச்சேன். அதை விஷால் சந்திர சேகர் பாட்டா ஆக்கிட்டாரு. இப்போ அதை பார்த்துட்டு ஒருத்தன் பம்பாய்ல இருந்து போன் பண்ணி 'யுவர் வாய்ஸ் ஈஸ் சோ சூப்பர். எனக்கு ஒரு பாட்டு பாடிக் கொடுங்க'ன்னு கூப்பிடறான். நானும் பாடப் போறேன். எங்க குடும்பத்துல எல்லாருக்கும் குரல் எப்படி இருக்கும்னு உங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா என்னையே இந்த படத்து ஆளுங்க பாடகர் ஆக்கிட்டாங்க .

    முன்னூத்திப் பத்து படங்கள்ல நடிச்சுட்டேன். 35 வருஷத்துக்கும் மேல நடிச்சுட்டு இருக்கேன். இப்போ கூட ஓடிக்கிட்டு இருக்கும் இறுதிச் சுற்று , அரண்மனை -2 படங்கள்ல என்னோட நடிப்பை எல்லாரும் பாராட்டுறாங்க .

    ஆனா இந்த ஜில் ஜங் ஜக் படம் வந்த பிறகு நான் நடிச்சதுலேயே பெஸ்ட் படம் இதுதான் னு எல்லாரும் சொல்வாங்க. அந்த அளவுக்கு இது சிறப்பான படம்," என்றார்.

    English summary
    After a short gap actor Radharavi has appeared before press and gave a blasting speech at Jil Jung Jak press meet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X