பெப்சிக்கு பதில் புதிய தொழிலாளர் அமைப்பு - சினிமா தயாரிப்பாளர்கள் அறிவிப்பு
புதிய தொழிலாளர் அமைப்பு அறிவிக்கப்படும் வரை புதுப்படங்கள் தொடங்கக் கூடாது- தயாரிப்பாளர்கள்
சினிமா தொழிலாளர் அமைப்பான பெப்சிக்கு பதிலாக புதிய அமைப்பை தோற்றுவிக்கப் போவதாக தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தமிழ் சினிமாவில் சர்வ பலம் மிக்க தொழிலாளர் அமைப்பாக திகழ்கிறது பெப்சி. ஆனால் இந்த அமைப்புக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பெரிதாக நல்லுறவு கிடையாது. ஊதியம் தொடர்பாக எப்போதும் பிரச்சினைதான். ஆனால் ஒவ்வொரு முறையும் தயாரிப்பாளர்கள் விட்டுக்கொடுத்துப் போகும் நிலை உள்ளது.
இப்போது அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் பெப்சி அமைப்பினர் தகராறு செய்ததைத் தொடர்ந்து, பெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினை பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பெப்சியே வேண்டாம், புதிய சங்கம் அமைக்கலாம் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பிட்டு இருப்பது:
1. ஏப்ரல் 30ம் தேதி வரை புதிய தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் எதுவும் துவக்கப்படக்கூடாது.
2. தற்போது படப்பிடிப்பில் உள்ள தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் 2012ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிவரை தற்போது நடைபெற்றுவரும் முறையில் தொடர்ந்து நடைபெறலாம். ஆனால் மே மாதம் 2ம் தேதியில் இருந்து தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் புதிதாக அமைக்கவுள்ள தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பைச் சார்ந்த தொழிலாளர்களோடு மட்டுமே நடைபெற வேண்டும்.
3. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட முடிவுகளை எல்லாத் தயாரிப்பாளர்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
மேற்கண்ட முடிவுகளை மீறி செயல்படும் தயாரிப்பாளர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்க விதி எண் 14ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்து அதை இன்று அறிவிக்கலாம் என்று இருந்தோம்.


Click it and Unblock the Notifications











