இன்று முதல் சினிமா ஸ்ட்ரைக்... புதிய படங்கள் திரையிடுவது அதிரடியாக நிறுத்தம்!!

By Shankar

Recommended Video

தென்னிந்திய திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் | Filmibeat Tamil

சென்னை: இன்று முதல் சினிமா ஸ்ட்ரைக் தொடங்கியுள்ளது. அதன்படி இன்று மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவது முழுமையாக நிறுத்தப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் கூறுகையில், "க்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்ஸ் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்த வித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

No new movie release from Today

இதுவரை தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்றும், இனி handling Charges மட்டுமே செலுத்துவது முடிவெடுக்கப்பட்டது.

திரையரங்குகளில் திரையரங்கு உரிமையாளர்களே Projector and Server சொந்தமாக வைத்துகொள்ள வேண்டும். அந்த திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டுமாய் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தெனிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்ட், தமிழ்நாடு இயக்குனர் சங்கம், தெனிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சமேளனம் ஆகிய அமைப்புகள் கேட்டு கொள்கிறோம்.

இந்தப் பிரச்சனை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த நலன் கருதி நமது சங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவினை மீறும் எந்த ஒரு தயாரிப்பாளர் இருந்தாலும் அவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X