NGK: ஒன்னுல்ல, இரண்டுல்ல 19 ஆண்டுகளாக காத்திருந்த சூர்யா

By Siva

Recommended Video

Actor Suriya at NGK Meet: என்ஜிகே ஒரு சாதாரண அரசியல் திரில்லர் படமாக இருக்காது- வீடியோ

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சூர்யா அளித்த பேட்டியை பார்த்தால் அவருக்கும், செல்வராகவனுக்கும் இடையே பிரச்சனை என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள என்.ஜி.கே. அரசியல் த்ரில்லர் படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போனதால் சூர்யா, செல்வராகவன் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.

அந்த தகவல் உண்மை இல்லை என்பது போன்று உள்ளது சூர்யாவின் பேட்டி. ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொண்டார். அப்பொழுது அவர் படம் குறித்து கூறியதாவது,

 என்.ஜி.கே.

என்.ஜி.கே.

அரசியல் பின்னணி இல்லாத ஒருவரை எப்படி அரசியலுக்கு இழுக்கிறார்கள் என்பதை என்.ஜி.கே. படத்தில் காட்டியுள்ளோம். என் மனைவியின் படத்தில் இருந்து ஒரு வரியை கடன் வாங்கிக் கூறுகிறேன். தீமை நடக்கிறது என்று சொல்லி அதை தடுக்காமல் பார்ப்பவர் அதில் ஒரு பங்காகிவிடுவார். என்.ஜி.கே. படத்தின் மையக்கரு இது தான்.

 19 ஆண்டுகள்

19 ஆண்டுகள்

மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர் என்.ஜி.கே.. என் பிற படங்களில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும். செல்வராகவனுடன் சேர்ந்து பணியாற்ற 19 ஆண்டுகளாக காத்திருந்தேன். நான் செல்வராகவனின் தீவிர ரசிகன்.

 செல்வராகவன்

செல்வராகவன்

செல்வராகவன் ஒரு ஒன் மேன் ஆர்மி. அவருக்கு நடிப்பில் இருந்து அனைத்தும் தெரியும். செல்வராகவனுக்கு இணை செல்வராகவன் தான். அடுத்த செல்வராகவன் என்று யாரையும் கூற முடியாது. அவர் நடிகர்களிடம் வேலை வாங்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். அவர் பாணி எனக்கு புதிதாக இருந்தது.

 தமிழக அரசியல்

தமிழக அரசியல்

செல்வராகவன் படத்தில் நடிக்க செல்வது ஆசிரமத்திற்கு செல்வது போன்று. யாரும் செல்போனை பயன்படுத்துவது இல்லை, தேவையில்லாமல் பேசுவது இல்லை. என்.ஜி.கே. படத்திற்கும் தமிழக அரசியல் சூழலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார் சூர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X