யப்பா பேட்ட, தூக்குதுரை ஓரமாப் போங்க: 'அல்வா' தான் ஆல்டைம் பொங்கல் வின்னர்
சென்னை: பேட்ட, விஸ்வாசம் இடையே போட்டி நடக்கும் நேரத்தில் சிபிராஜ் போட்ட ட்வீட் தான் அல்டிமேட்.
ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 10ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வசூல் நிலவரம் தொடர்பாக ட்விட்டரில் பெரிய சண்டையே நடக்கிறது. இந்த பஞ்சாயத்துக்கு நடுவே நடிகர் சிபிராஜ் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
அமைதிப்படை
1994ம் ஆண்டு பொங்கல் ரேஸில் வென்றது அமைதிப்படை. அந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்று. அப்பாவின் கெரியரில் முக்கியமான படம் மற்றும் சிறந்த அரசியல் படங்களில் ஒன்று. இப்படி ஒரு படத்தை கொடுத்த மணிவண்ணன் அங்கிளுக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார் சிபி. #25YrsOfBlockbusterAmaidipadai

நாகராஜ சோழன்
அம்மாவாசை கால் படுது என்ற வசனத்தையும், சத்யராஜ் அல்வா கொடுத்ததையும் மறக்கத் தான் முடியுமா. இன்றும் அந்த அல்வா பிரபலமாச்சே. சிபிராஜ் கூறியுள்ளது மிகச் சரியே.
சத்யராஜ்
இயக்குனர் ராஜ்குமார் கூறுவதும் உண்மை தானே.
அரசியல்
அவர் கேரக்டரையே யாராலும் புரிந்து கொள்ள முடியாது.


Click it and Unblock the Notifications











