பிக் பாஸ் அல்ல எனக்கு 'குட்டி பாஸ்' தான் முக்கியம்: கஸ்தூரி
Recommended Video

சென்னை: தனக்கு பிக் பாஸ் அல்ல குட்டி பாஸ் தான் முக்கியம் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியது. பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று கூறி வைரலான பட்டியலில் கஸ்தூரியின் பெயரும் இருந்தது.

இந்நிலையில் இது குறித்து கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூறி யாரும் என்னை அணுகவில்லை. அப்படியே கேட்டிருந்தாலும் முடியாது என்று கூறியிருப்பேன். எனக்கு ஏற்கனவே குட்டி பாஸ் உள்ளார். #biggbosstamil2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் உத்தேசமில்லை. எனக்கு சின்ன பாஸ்தான் முக்கியம் என்று ட்வீட்டியுள்ளார் கஸ்தூரி.
பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொள்ளுமாறு கஸ்தூரியை அழைத்தபோது குழந்தைகளை பிரிந்து இருக்க முடியாது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











