ரஞ்சித் கேரக்டருக்கு உயிர்கொடுத்த அருண் விஜய்... அக்னி சிறகுகள் டைரக்டர் நவீன் பாராட்டு
சென்னை : நடிகர் அருண் விஜய், விஜய் ஆன்டணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் அக்னி சிறகுகள்.
இந்த படத்தில் ரஞ்சித் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார். படத்தின் டப்பிங்கை அவர் முடித்துள்ளார்.
இந்நிலையில் ரஞ்சித் கேரக்டருக்கு அருண் விஜய்யை தவிர வேறு யாரும் இத்தகைய அளவில் உயிர் கொடுத்திருக்க முடியாது என்று படத்தின் டைரக்டர் நவீன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அக்னி சிறகுகள் படம்
நடிகர் அருண் விஜய், விஜய் ஆன்டணி, அக்ஷரா ஹாசன், பிரகாஷ்ராஜ், நாசர் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் அக்னி சிறகுகள். இந்த படத்தில் ரஞ்சித் என்ற கேரக்டரில் அருண் விஜய் நடித்துள்ளார். மூடர்கூடம் திரைப்படத்தை டைரக்ட் செய்துள்ள நவீன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

முதல்முறையாக படப்பிடிப்பு
படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ள நிலையில் டி சிவா தன்னுடைய அம்மா கிரியேஷன்சிற்காக இந்த படத்தை தயாரித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முதல்முறையாக கஜகஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் வித்தியாசமான தளங்களை ரசிகர்களுக்கு படக்குழுவினர் விருந்தாக்கியுள்ளனர்.

நவீனிற்கு நன்றி
இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளை படத்தின் நாயகன் அருண் விஜய் தற்போது முடித்துக் கொடுத்துள்ளார். படத்தில் ரஞ்சித் கேரக்டர் அனைவரது கவனத்தையும் கண்டிப்பாக ஈர்க்கும் என்றும் இத்தகைய கேரக்டரை தனக்கு கொடுத்த நவீனிற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

அருண் விஜய்க்கு நவீன் பாராட்டு
இதனிடையே, ரஞ்சித் கேரக்டருக்கு அருண் விஜய்யை தவிர வேறு யாரும் இத்தகைய அளவில் உயிர் கொடுத்திருக்க முடியாது என்று படத்தின் டைரக்டர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் பல ஸ்டண்ட் காட்சிகளை அவர் சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











