என் வீட்டை சினிமா பிரபலம் கிஃப்டாக கொடுத்தாரா..? நடிகை சமந்தாவிடம் ஓபனாக பேசிய ஹீரோயின்!

By

சென்னை: நான் வசிக்கும் வீட்டை அந்த சினிமா பிரபலம் பரிசாக கொடுத்ததாகச் சொன்னார்கள் என்று பிரபல நடிகை வருத்தத்தோடு கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார், நடிகை ரகுல் பிரீத் சிங்.

தமிழில், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

வீட்டையே ஜிம்மாக

வீட்டையே ஜிம்மாக

இப்போது சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார். பிட்னஸில் அதிக ஆர்வமுள்ள ரகுல் பிரீத் சிங், நேரம் கிடைக்கும்போது ஜிம்மில்தான் இருப்பார். லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் அவர், தனது வீட்டையே ஜிம்மாக மாற்றி இருந்தார். அவர் சில ஃபிட்னஸ் ஸ்டூடியோக்களை நடத்தி வருகிறார்.

வழக்கில் சிக்கினார்

வழக்கில் சிக்கினார்


சமீபத்தில் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர். ஆனால், தனக்கும் போதை பொருளுக்கும் தொடர்பில்லை என்றார் ரகுல். தெலுங்கு பட ஷூட்டிங் முடிந்த கையோடு ஹாலிடேவுக்காக குடும்பத்துடன் மாலத்தீவு சென்றிருந்த ரகுல் பிரீத் சிங், அங்கிருந்து புகைப்படங்களாக வெளியிட்டு வந்தார்.

ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங்

இந்நிலையில், நடிகை சமந்தா ஓடிடி தளமான 'ஆஹா'வுக்காக நடத்தும் டாக் ஷோவில் ரகுல் பிரீத் சிங் கலந்து கொண்டிருக்கிறார். இதில் ஏற்கனவே விஜய் தேவரகொண்டா, ராணா, தமன்னா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். ரகுல் பிரீத் கலந்துகொண்ட ஷோ வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது.

பிரபலம் கிஃப்ட்

பிரபலம் கிஃப்ட்

அதன் புரமோ இப்போது வெளியாகி இருக்கிறது. அதில், அவரிடம் வதந்திகள், கிசுகிசு பற்றி சமந்தா கேட்டபோது, அதைக் கண்டு கொள்வதில்லை என்கிறார் ரகுல். யாரும் விசாரித்து, சரியானதுதானா என்பதை தெரிந்துகொண்டு எழுதுவதில்லை. ஐதராபாத்தில் தான் வசிக்கும் பிளாட்டை, ஒரு தெலுங்கு பிரபலம் கிஃப்டாக கொடுத்ததாகக் கூட செய்தி வெளியானது.

பெரிய அபத்தம்

பெரிய அபத்தம்

வீட்டை யாராவது கிஃப்டாக கொடுப்பார்களா? நான் கேள்விபட்ட பெரிய அபத்தம் அது. அதனால் அதை கண்டுகொள்வதில்லை, என் நடிப்பு பேசட்டும் என்று விட்டுவிட்டேன் என்கிறார் ரகுல் பிரீத் சிங். இதில் இன்னொரு கெஸ்டாக இயக்குனர் கிரீஷ் இடம் பெற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X