அவங்களை மாதிரி எந்த நடிகையுமே இல்லை... அந்த டெடிகேஷன் இருக்கே... சன்னி லியோனை புகழும் இயக்குனர்!

By

கொச்சி: சன்னி லியோனை போல எந்த நடிகையும் அர்ப்பணிப்புடன் இல்லை என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார் இயக்குனர் ஒருவர்.

Recommended Video

நிர்வாணமாக திராட்சை குளியல் போடும் சன்னி லியோன்

பாலியல் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், அதை விட்டுவிட்டு இப்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் வடகறி

தமிழில் வடகறி

மலையாளத்தில் மதுரராஜா என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். தமிழில், ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள். படங்கள், பாடல்களை தாண்டி சன்னி லியோன், சமூக வலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களால் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறார்.

ரங்கீலா

ரங்கீலா

இவரது கணவர் டேனியல் வெபர். நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி, வாடகைத்தாய் மூலம் பெற்ற ஆசேர் மற்றும் நோவா சிங் என்ற குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர், இப்போது மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ரங்கீலா என்று டைட்டில் வைத்துள்ளனர்.

சான்ட்ரா லோபஸ்

சான்ட்ரா லோபஸ்

இதை பேக்வாட்டர் ஸ்டூடியோ மூலம், ஜெயலால் மேனன் தயாரிக்கிறார். இதை சந்தோஷ் நாயர் இயக்குகிறார். இவர் பகத்பாசில், நிவேதா தாமஸ் நடித்த மணிரத்னம், தியான் ஶ்ரீனிவாசன், அஜூ வர்கீஸ் நடித்த சச்சின் படங்களை இயக்கியவர். இந்தப் படத்தில், நடிகை சன்னி லியோன் பாலிவுட் நடிகையாக நடிக்கிறார். அவரது கேரக்டர் பெயர், சான்ட்ரா லோபஸ்.

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு

படம் பற்றி சந்தோஷ் நாயர் கூறும்போது, இது காமெடி த்ரில்லர் படம். ரோட் மூவின்னும் சொல்லலாம். சமூக சேவைகளில் ஈடுபடும் கேரக்டரில் சன்னி நடிக்கிறார். ஒரு கிராமத்துக்கு ஸ்பான்சர் செய்கிறார். அதைச் சுற்றி நடக்கும் கதைதான் படம். நடிகை சன்னி லியோன் மாதிரி, சினிமாவில் வேறு எந்த நடிகையும் அர்ப்பணிப்புடன் இல்லை.

நேரம் பார்க்காமல்

நேரம் பார்க்காமல்

அவரைப் போல யாரும் அவ்வளவு ஈடுபாட்டுடன் இருப்பதில்லை. சன்னி லியோன் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்கிறார். அவரது அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது என்று தெரிவித்துள்ளார். இந்த படம் மூலம் அவர் மலையாள ரசிகர்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்றும் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X