பிக்பாஸ்ல கலந்துகிட்டா பிம்பிளிக்கா பிளாப்பி தானா.. நடிகை கஸ்தூரிக்கே ஒரு வருஷமா சம்பளம் தரலையாமே?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனக்கு விஜய் டிவி சம்பளம் வழங்கவில்லை என நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

வரும் அக்டோபர் 4ம் தேதி பிக்பாஸ் தமிழ் சீசன் 4 கோலாகலமாக துவங்க உள்ளது.

இந்நிலையில், கஸ்தூரி போட்டுள்ள இந்த ட்வீட் விஜய் டிவி மீதும், பிக்பாஸ் நிகழ்ச்சி மீதும் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது.

ஏகப்பட்ட சர்ச்சைகள்

ஏகப்பட்ட சர்ச்சைகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. மேலும், சர்ச்சைகள் செய்து பிரபலமாகும் நபர்களையும் போட்டியாளர்களாக்கி டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிற வைத்து வருகிறது விஜய் டிவி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 4வது சீசன் வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியை விட அதிக அளவு பேரும் புகழும் பெற்றார். அதன் காரணமாக திடீரென பைத்தியக்கார டாஸ்க் கொடுத்து அவரை தற்கொலை முயற்சி செய்து கொள்ளும் அளவுக்கு கொண்டு போய் அவரது எபிசோடை முடித்து வைத்தது பிக்பாஸ் குழு.

பிக்பாஸ் தேவையா

பிக்பாஸ் தேவையா

அதனை மனதில் வைத்துக் கொண்டு 4வது சீசன் ஆரம்பமாகவுள்ள நிலையில், சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி தேவையா? என்றும் போட்டியாளர்களை அவர்கள் டார்ச்சர் செய்வதாகவும், காண்ட்ராக்ட் எனும் பெயரில் போட்டியாளர்களை நிர்பந்திக்கினர் என்றும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். ஆனால், அதன் பிறகு அதுகுறித்து எதுவுமே சொல்லவில்லை.

குடும்ப சண்டை

குடும்ப சண்டை

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இடையே இருந்த குடும்ப பிரச்சனையையும் நிகழ்ச்சிக்குள் கொண்டு வந்து டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிற வைத்து, பின்னர், அவர்களை அப்படியே கழட்டி விட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. சர்வாதிகாரி டாஸ்க் எனும் பெயரில் ஐஸ்வர்யா தத்தாவை வைத்து பாலாஜி மீது குப்பையையும் கொட்டி அசிங்கப்படுத்தினார்கள்.

கையை அறுத்துக் கொண்டு

கையை அறுத்துக் கொண்டு

ஜாங்கிரி மதுமிதா என அழைக்கப்படும் காமெடி நடிகை மதுமிதாவையே சீரியஸ் ஆக்கி விட்டனர் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி தனது கையை அறுத்துக் கொண்ட மதுமிதா, நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மீது பகிரங்கமாக போலீசில் புகார் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது. ஆனால், அதன் பிறகு அந்த பஞ்சாயத்து எப்படி முடிந்தது என்றே தெரியவில்லை.

இடுப்பு மேட்டர்

இடுப்பு மேட்டர்

சர்ச்சையை கிளப்பி டிரெண்டான மீரா மிதுன், வனிதா விஜயகுமார் என பலரையும் கடந்த சீசனில் உள்ளே கொண்டு வந்து எக்கச்சக்க டி.ஆர்.பி. ரேட்டிங்கை விஜய் டிவி பிக்பாஸ் ஷோ மூலம் பெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சேரன் தனது இடுப்பை பிடித்து விட்டார் என மீரா மிதுன் அவரை அசிங்கப்படுத்தியது மட்டுமின்றி, தற்போது ட்வீட் போட்டு ஏகப்பட்ட பிரபலங்களையும் அசிங்கப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஒரு வருஷமா சம்பளம் தரவில்லை

ஒரு வருஷமா சம்பளம் தரவில்லை

இந்நிலையில், எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த சீசனில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தற்போது போட்டிருக்கும் ட்வீட் புதிய வெடிகுண்டாகவே வெடித்துள்ளது. " No words to thank @vijaytelevision who have withheld my payment for over a year. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே manumission குழந்தைகளோட ஆப்பரேஷன் செலவுக்காகத்தான். I never believed any of your fake promises, but even I didnt expect this."

ஏன் புகார் கொடுக்கவில்லை

ஏன் புகார் கொடுக்கவில்லை

நடிகை கஸ்தூரியிடம் உங்களையே பிக்பாஸ் நிகழ்ச்சி குழு மற்றும் விஜய் டிவி ஏமாற்றி விட்டதா? என்றும், ஒரு வருஷமா ஏன் நீங்க புகார் கொடுக்கல என்றும் ஏகப்பட்ட கேள்விகளை நெட்டிசன்கள் அடுக்கி வைத்து வருகின்றனர். சிலர், இதுவும் ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டி ஸ்டன்ட் தான் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தட்டிக் கேட்பாரா

தட்டிக் கேட்பாரா

தப்புன்னா தட்டிக் கேட்பேன் என பிக்பாஸ் புரமோ வீடியோவில் வசனம் பேசும் உலக நாயகன் கமல்ஹாசனிடம் முறையிடலாமே என்றும், கமல் இந்த விவகாரத்தில் எதுவும் உதவவில்லையா? என்றும் உங்களுக்கு மட்டும் தான் கொடுக்கவில்லையா? இல்லை யாருக்குமே சொன்னபடி காசு கொடுப்பதில்லையா? என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் பறந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X