»   »  டைம்ஸ் 50 பிரபலங்கள் பட்டியல்: 'வருங்கால முதல்வருக்கே' இடமில்லையாம்.. !

டைம்ஸ் 50 பிரபலங்கள் பட்டியல்: 'வருங்கால முதல்வருக்கே' இடமில்லையாம்.. !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2016ல் மிகவும் விரும்பப்பட்ட ஆண் பிரபலங்கள் பட்டியலில் ரஜினி, கமல், அஜீத், விஜய்க்கு இடம் இல்லை.

2016ம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட ஆண் பிரபலங்கள் யார் என்று டைம்ஸ் குழுமம் ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் ஒரேயொரு தமிழ் நடிகர் தான் இடம்பெற்றுள்ளார்.

ரோஹித்

ரோஹித்

மிஸ்டர் வேர்ல்டு பட்டம் வென்ற ஹைதராபாத்தை சேர்ந்த ரோஹித் கந்தல்வால் டைம்ஸ் 50 பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரை அடுத்து கிரிக்கெட் வீரர் கோஹ்லி 2வது இடத்தில் உள்ளார்.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

டைம்ஸ் பட்டியலில் 3வது இடத்தில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் உள்ளார். பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் 4வது இடத்திலும், ஃபவாத் கான் 5வது இடத்திலும், சித்தார்த் மல்ஹோத்ரா 6வது இடத்திலும் உள்ளனர்.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு டைம்ஸ் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸ் 22வது இடத்தையும், ராணா 24வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தனுஷ்

தனுஷ்

டைம்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு தமிழ் நடிகர் தனுஷ் தான். தனுஷ் 26வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் வருங்கால முதல்வர் விஜய், அஜீத், ரஜினி, கமல் ஆகியோர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
What a Shame! Kollywood stars Ajith, Vijay, Rajinikanth, Kamal Haasan have not made it to the 2016 Times Most Desirable Men List. Dhanush is the only tamil star in the list.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil