twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழகம், கேரளாவில் அனுமதி..போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை 29ம் தேதி வரை தொடங்கக் கூடாது.. இது அங்கே!

    By
    |

    சென்னை: தமிழகத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை தொடங்க அனுமதித்து விட்டாலும் தெலங்கானா அரசு அனுமதி மறுத்துவிட்டது.

    லாக்டவுனுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, கேரளாவில், சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க அம்மாநில அரசு அனுமதி அளித்தது.

    இதே போல, தமிழ் சினிமாவிலும் அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கோரிக்கை வைத்தனர்.

    பிகினியில் போஸ் கொடுத்த கிரண்.. செம கட்ட என ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க! பிகினியில் போஸ் கொடுத்த கிரண்.. செம கட்ட என ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க!

    போஸ்ட்-புரொடக்சன்

    போஸ்ட்-புரொடக்சன்

    கோரிக்கை மனுவில் ' 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு மட்டுமாவது அனுமதி வழங்க வேண்டும்' என்று பெப்சியும் தயாரிப்பாளர்களும் கூறியிருந்தனர்.

    தமிழக அரசு அனுமதி

    தமிழக அரசு அனுமதி

    இதையடுத்து தமிழக அரசு, 11 ஆம் தேதி முதல், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க அனுமதி அளித்தது. இதுபற்றி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், படத்தொகுப்பு (5 பேர்) , கிராபிக்ஸ் (10 முதல் 15 பேர்) டப்பிங் (5 பேர்), டி.ஐ (5 பேர்), பின்னணி இசை (5 பேர்), சவுண்ட் மிக்சிங் ( 5 பேர்) ஆகிய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை மேற்கொள்ளலாம்.

    கிருமி நாசினி

    கிருமி நாசினி

    சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நேற்று தொடங்கியுள்ளன. தமிழ்நாடு, கேரளாவைப் போல கர்நாடகாவிலும் சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை தொடங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

    அனுமதி அளிக்கவில்லை

    அனுமதி அளிக்கவில்லை

    இந்நிலையில் தெலுங்கு சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் தொடங்க தெலங்கானா அரசு அனுமதிக்கும் என்று தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களும் எதிர்பாத்திருந்தனர். ஆனால், வரும் 29 ஆம் தேதி போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு அனுமதி இல்லை என்று அம்மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழக, தலைவர் ராம் மோகன் ராவ் தெரிவித்துள்ளார். இருந்தாலும் இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்யும் என்று அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Telangana government has informed Film Development Corporation to not carry out any post-production works until May 29.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X