மறுவார்த்தைக்காக ஒருவார்த்தை கூட பேசாத தனுஷ்.. எல்லாம் அந்த கோபம் தானா?

Recommended Video

#ENPTFromTomorrow | No promotion from Dhanush for ENPT release

சென்னை: எனை நோக்கிப் பாயும் தோட்டா நாளை ஒருவழியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கெளதம் மேனனின் கடன் பிரச்சனைகளை தீர்த்து வைத்து, எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தையும் தனது பேனரில் ரிலீஸ் செய்கிறார்.

ஆனால், இதுவரை நடிகர் தனுஷ், எனை நோக்கிப் பாயும் தோட்டா ரிலீஸ் குறித்து ஒரு சின்ன ட்வீட் கூட போடவில்லை. இதனால், தனுஷுக்கு இன்னும் கெளதம் மேனன் மேல் உள்ள கோபம் குறையவில்லை போல என சமூக வலைதளத்தில் பேசிக் கொள்கின்றனர்.

நாளை ரிலீஸ்

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா நாளை வெளியாகிறது. நீண்ட நாட்களாக இந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருந்த தனுஷ் ரசிகர்கள், ஒருவழியாக படம் வெளியாகிறது என்ற சந்தோஷத்தில் டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர்.

போட்டி

போட்டி

கடந்த வாரம் வெளியான படங்களில் த்ருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா தியேட்டர்களில் சிறப்பாக ஓடி வருகிறது. இந்நிலையில், நாளை எனை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் அடுத்த சாட்டை படங்கள் வெளியாகவுள்ளதால், ஆதித்ய வர்மா படத்தின் வசூல் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனை நோக்கிப் பாயும் தோட்டா அந்த பாதிப்பை உண்டு பண்ணுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டிரெண்டிங்

எனை நோக்கிப் பாயும் தோட்டா நாளை வெளியாகவுள்ள நிலையில், #ENPTFromTomorrow ஹேஷ்டேகை தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அசுரன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் 150 கோடிக்கும் மேல் வசூலித்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தியளவில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், அசுரன் படத்திற்கு பிறகு வெளியாகும் தனுஷ் படம் என்பதால், எனை நோக்கிப் பாயும் தோட்டாவிற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

தனுஷுக்கு கோபமா?

தனுஷுக்கு கோபமா?

பல பிரச்சனைகளுக்கு பிறகு தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியாகவுள்ளது. ஆனால், அது குறித்து நடிகர் தனுஷ் இதுவரை எந்தவொரு பேட்டியோ அல்லது சின்னதாக ஒரு ட்வீட்டோ போடவில்லை. அசுரன் படத்திற்கு அத்தனை முறை விளம்பரம் செய்த தனுஷ், எனை நோக்கிப் பாயும் தோட்டா ரிலீசை கண்டு கொள்ளாததற்கு கெளதம் மேனன் மீது ஏற்பட்ட கோபம் தான் காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசிக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X