ரெட் கார்டு இல்லை.. மீண்டும் ஏமாற்றிய பிக் பாஸ்.. பாலாவுக்கு வேற ஒரு பிளான் வச்சிருக்காங்க போல!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜீத் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

இந்நேரம் வீட்டுக்குச் சென்று மட்டன் பிரியாணியை ஒரு வெளு வெளுத்துக் கொண்டு குடும்பத்துடன் சந்தோஷமாக பொழுதை கழித்துக் கொண்டிருப்பார்.

பாலா பண்ண அட்டகாசங்களுக்கு கன்ஃபெஷன் ரூம் ட்ரீட்மென்ட் மட்டுமே கொடுத்து, ரெட் கார்டு கொடுக்காமல் அவரை மீண்டும் உள்ளே அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

பாலாஜி முருகதாஸ் நல்லவனாகி விட்டால் அவர் தான் இந்த சீசனின் ஹீரோ. கோபத்தில் அறிவை இழந்து கத்த தொடங்கி விட்டதன் காரணமாக வில்லனாக பார்க்கப்படுகிறார். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது பாலாவின் விஷயத்தில் சரியாகவே பொருந்துகிறது. ஆரி அதே கோபத்தை வெளிப்படுத்தி இருந்தால், இந்நேரம் வெளியேறி இருப்பார்.

ரெட் கார்டு இல்லை

ரெட் கார்டு இல்லை

பாலாஜி முருகதாஸ் ஒரு பைத்தியக்காரரை போல செயல்படுகிறார் என்றும், சைக்கோ போல நடந்து கொள்கிறார் அவருக்கு உடனடியாக ரெட் கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். ஏற்கனவே சனம் ஷெட்டியை கேவலப்படுத்தி பேசியதற்கும், அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணித்தான் அவர் அழகி பட்டத்தை வென்றார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்ததற்கும் கூட பாலாவுக்கு ரெட் கார்டு கொடுக்காத நிலையில், இப்போதும் அவரை வெளியேற்ற விஜய் டிவி விரும்பவில்லை.

வேற பிளான்

வேற பிளான்

பாலாஜி முருகதாஸுக்கு பிக் பாஸ் குழு வேறு ஒரு சிறப்பான ஸ்க்ரிப்ட்டை வைத்திருப்பதாகவே தெரிகிறது. ஒரு வேளை கவின் போல பணத்தைத் தூக்கிக் கொண்டு பெட்டியோடு ஓடிவிடுவார். இல்லை என்றால், ரன்னர் அப் ஆகும் வாய்ப்பு இருக்கு என்றே பலரும் கணித்து வருகின்றனர்.

டைட்டில் கிடைக்குமா?

டைட்டில் கிடைக்குமா?

பாலா இவ்வளவு பேசியும் அவரை வெளியே அனுப்பாமல் விஜய் டிவி வைத்திருக்கும் நிலையில், ஒரு வேளை அவருக்கு இந்த சீசனுக்கான பிக் பாஸ் டைட்டிலை கொடுக்க திட்டமா? என்கிற சந்தேகமும் எழுகிறது. அப்படி நடந்தால், ரசிகர்களின் எதிர்ப்பு வேற லெவலில் இருக்கும், நிகழ்ச்சியின் மீதான நம்பகத்தன்மை போய்விடும் என்றும் கூறுகின்றனர். ஆனால், கடைசி முடிவு நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் தான் உள்ளது.

மன்னிப்புக்கு விருது

மன்னிப்புக்கு விருது

பாலாஜி முருகதாஸ் இதுவரை பிக் பாஸ் வீட்டில் அதிக முறை மன்னிப்பு கேட்ட போட்டியாளருக்கான விருதை பெற தகுதியானவர் என்றும், ஞாயிற்றுக்கிழமை கமல் எபிசோடு முடிந்ததும் மீண்டும் ஆரியுடன் மல்லுக்கு வந்து விடுவார் அதுதான் அவரை இந்த சீசனில் வில்லாதி வில்லனாகவே மாற்றுகிறது என்றும் கூறி வருகின்றனர்.

நாளைக்கு நாமினேஷன்

நாளைக்கு நாமினேஷன்

அடுத்த வாரம் ரியோ ராஜ் தலைவர் என்பதால், அவரை விஜய் டிவி ஃபைனலுக்கு அனுப்பி விட்டது. ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் நிச்சயம் மீண்டும் ஆரியை கண்டிப்பாக நாமினேட் செய்வார்கள். அடுத்த வாரம் பாலவும் நாமினேஷனுக்கு வருவார் என்றே தெரிகிறது. ஏனென்றால், அன்பு கேங்கில் உள்ள மூவரும் ஆரியும் பாலாவையும் நாமினேட் செய்வார்கள். ஆரி, ரம்யா, பாலா மற்றும் ஷிவானி நாமினேஷனுக்கு வருவார்கள். சோம், கேபி, ரியோ சூப்பராக சேவ் ஆகிவிடுவார்கள் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X