தேர்தல் எஃபெக்ட்: இந்த வாரம் ஒரு தமிழ்ப் படம் கூட வெளியாகலையே!
வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் நான்கைந்து சிறு, நடுத்தர தமிழ்ப் படங்களாவது வெளியாகும். ஆனால் இந்த வாரம் ஒரு தமிழ்ப் படம் கூட ரிலீசாகவில்லை.
கடந்த 18 மாதங்களில் இப்படி ஒரு நிலை கோடம்பாக்கத்தில் ஏற்பட்டதே இல்லை.
இன்று வெளியாகவிருந்த திருமணம் என்னும் நிக்காஹ் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
அதே நேரம் இரண்டு ஆங்கிலப் படங்கள் மட்டும் வெளியாகியுள்ளன. ஒன்று கோடையையும் குழந்தைகளையும் குறிவைத்து வரும் காட்ஸில்லா. இன்னொன்று ஃபேடிங் ஜிகோலோ.
இன்று தமிழ்ப் படங்களே வெளியாகாமல் போனதற்கு காரணம்.. ஊரறிந்ததுதான். எல்லோரும் தேர்தல் முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலிருப்பார்கள். இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் நிச்சயம் இரண்டு தினங்களுக்கு ஓபனிங் வசூல் இருக்காது என்பதால்தான் தமிழ்ப் படங்கள் வெளியாகவில்லை.

அடுத்த வாரம்.... ரஜினியின் கோச்சடையான் வருகிறது. கிட்டத்தட்ட 650 அரங்குகள் இந்தப் படத்துக்காகக் காத்திருக்கின்றன, தமிழகத்தில்.


Click it and Unblock the Notifications











