twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு காலத்தில் மதுரையில் ரவுடிகள் இருந்தார்கள்.. இப்போ இல்லை! - பாரதிராஜா

    By Shankar
    |

    சென்னை: மதுரை என்றாலே ரவுடிகள், தாதாக்கள் நிறைந்த ஊர் என்று காட்டுகிறார்கள். ஒரு காலத்தில் மதுரையில் ரவுடிகள் இருந்தார்கள்.. இப்போது இல்லை, என்றார் இயக்குநர் பாரதிராஜா.

    'ஆடுகளம்' படத்துக்குப் பிறகு எஸ்.கதிரேசன் தயாரித்துள்ள புதிய படம், 'ஜிகிர்தண்டா.' இந்த படத்தை பீட்சா படம் தந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் அரங்கில் நேற்று காலை நடந்தது.

    விழாவில், இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசையை வெளியிட்டுப் பேசினார்.

    மிரட்டலான படங்கள்

    மிரட்டலான படங்கள்

    அவர் கூறுகையில், ‘‘தமிழ் சினிமாவில் இப்போது வித்தியாசமான படங்கள் வெளிவருகின்றன. தொழில்நுட்பம் மிரட்டலாக இருக்கிறது. அதேசமயம் சில படங்கள் சம்பவங்களாக உள்ளன. கதையிலும் கவனம் செலுத்த வேண்டும். ‘பீட்சா' படம் பார்த்துவிட்டு மிரண்டு போனேன்.

    இயக்குநர்கள் ஆதிக்கம்

    இயக்குநர்கள் ஆதிக்கம்

    படங்களுக்கு கோடி கோடியாக செலவழிப்பது முக்கியமல்ல. நல்ல கதையம்சம் உள்ள படங்களை கொடுக்க வேண்டும். முன்பு சினிமாவில் நடிகர்கள் ஆதிக்கம் இருந்தது. நவீன காலத்தில், இயக்குனர்கள் ஆதிக்கம் இருந்து வருகிறது.

    மதுரையில் இப்போ ரவுடிகள் இல்லை

    மதுரையில் இப்போ ரவுடிகள் இல்லை

    மதுரை என்றாலே நிழல் உலக தாதாக்கள் நிறைந்த நகரம் என்பது போல் படம் எடுக்கிறார்கள். ஒரு காலத்தில் மதுரையில் ரவுடிகள் இருந்தார்கள். இப்போது இல்லை. மதுரை என்றாலே பயங்கரம் என்று காட்டுவதை குறைக்கலாம்.

    நான் மென்மையானவன்

    நான் மென்மையானவன்

    பாரதிராஜா முரடன் போல் சிலருக்கு தோன்றலாம். ஆனால், நான் மென்மையானவன். வன்முறை காட்சிகளை பார்த்தால், தலையை குனிந்து கொள்வேன். படங்களில், கண்ணாடியை உடைக்கும் காட்சிகளைக் கூடப் பார்க்க மாட்டேன்.

    வன்முறை காட்சிகள் வேணாமே...

    வன்முறை காட்சிகள் வேணாமே...

    சமுதாயம் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. கற்பழிப்பு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால், சினிமாவில் வன்முறையை குறைத்துக் கொள்ளுங்கள். இளம் டைரக்டர்கள் இதை மனதில் வைத்து படம் எடுக்க வேண்டும். எப்படி தாய்ப்பாலை மறக்க முடியாதோ அதுபோல் தமிழ் பண்பாட்டை மறக்காமல் படம் எடுங்கள்,'' என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, தயாரிப்பாளர் எஸ்.தாணு, சி.வி.குமார், இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, பாலாஜி சக்திவேல், கஸ்தூரிராஜா, விஜய், ராம், பாலாஜி தரணிதரன், பொன்ராம், நடிகர்கள் சித்தார்த், அருண் விஜய், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பேசினார்கள்.
    தயாரிப்பாளர்கள் சிவசக்தி பாண்டியன், அன்பாலயா கே.பிரபாகரன், அழகன் தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    English summary
    Director Bharathiraaja says that directors should avoid showing Madurai as violent city in their movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X