சீக்ரெட் ரூம்லாம் இல்லை.. நீ பொட்டியைத் தூக்கு பாப்பா.. ஜோவிகாவை வீட்டுக்கு அனுப்பிய பிக் பாஸ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7ல் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்றார். முதல் வாரத்திலேயே விசித்ராவை எதிர்த்து படிப்பு எல்லாம் முக்கியமில்லை, பள்ளிக்கு போவதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகுறாங்க, புடிச்சா படிக்கலாம், இல்லைன்னா நடிக்கலாம் என இஷ்டத்துக்கு பேச அவருக்கு ஆதரவு பெருகியது. அது விவதாப் பொருளாகவும் ஆனது.
ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் தனது பெயரை எழுத தெரியாமல் திணறியது, வீட்டில் சதா எந்நேரமும் தூங்கியது, பெரியவர்களை மட்டு மரியாதை இல்லாமல் பேசியது குறிப்பாக பிரதீப் ஆண்டனியை மட்டு மரியாதை இல்லாமல் பேசி ஒரு வேலைக்காரன் போல ட்ரீட் செய்தது என கிரைம் ரேட்டை சம்பாதித்தார்.

நாமினேஷனில் சிக்கிய ஜோவிகா: பிக் பாஸ் சீசன் 7ல் இந்த வாரம் நாமினேஷனில் தினேஷ், அனன்யா ராவ், விசித்ரா, மணி, கூல் சுரேஷ், பூர்ணிமா, விக்ரம் மற்றும் ஜோவிகா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். ஒவ்வொரு வாரமும் ஜோவிகா பல முறை நாமினேட் ஆகி வந்தார். அவரது அம்மா சப்போர்ட்டில் அவர் தப்பித்து வருவதாக விமர்சனங்களும் எழுந்து வந்தன. இந்நிலையில், இந்த வாரம் அவரை வனிதா விஜயகுமாரால் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
ஜோவிகா வெளியேற்றம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் ஜோவிகா விஜயகுமார் வெளியேறி உள்ளார் என்கிற தகவல்கள் வெளியான நிலையில், சீக்ரெட் ரூமில் அவர் இருக்கிறார் என விக்கிபீடியா எடிட் செய்து ரசிகர்களை கன்ஃபியூஸ் செய்தது.
சீக்ரெட் ரூமில் இருக்கிறாரா?: ஆனால், தற்போது ஜோவிகா விஜயகுமார் எந்தவொரு சீக்ரெட் ரூமிலும் இல்லை என்றும் தனது பொட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி விட்டார் என்றும் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் எவிக்ட் செய்யப்பட்டு கமல்ஹாசன் உடன் ஸ்டேஜில் ஆசி வாங்கி விட்டு தமிழ் சினிமாவின் அடுத்த இளம் ஹீரோயினாக மாறப் போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் அவர் கமிட் ஆகியிருப்பதாக வனிதா கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











