இந்த முறையும் சான்ஸ் இல்ல.. விக்ரமின் அந்த படத்தில் ஸ்ருதியும் இல்லை.. அக்‌ஷராவும் இல்லையாம்!

சென்னை: சியான் விக்ரமின் அந்த த்ரில்லர் படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் நடிக்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Recommended Video

Shruti Hassan undergoes Mental Illness | Kamal Hassan, Labam, Andrea, Broken Angel

ஹாலிவுட் படமான Don't Breathe படத்தை தமிழில் ரீமேக் செய்யப் போவதாக அறிவித்து இருந்தனர்.

மேலும், அந்த படத்தில் சியான் விக்ரம் நடிக்கப் போவதாகவும், இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன படம்

என்ன படம்

இயக்குநர் ஃபெடி அல்வரேஸ் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான Don't Breathe படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சீட் எட்ஜ் த்ரில்லரான இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யப் போவதாக பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. மேலும், இந்த படத்தில் விக்ரம் பார்வை அற்ற ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின.

விக்ரம் பிசி

விக்ரம் பிசி

ஆனால், இந்த படத்தின் புரொஜக்ட் ஆரம்பிக்கப்படாமல் தாமதிக்கப் பட்ட நிலையில், கோப்ரா, பொன்னியின் செல்வன், மகாவீர் கர்ணன் என பல பிரம்மாண்ட படங்களில் நடிக்க விக்ரம் சென்று விட்டார். அவர் பிசி ஆனாதால், இந்த படமும் அப்படியே ஆரம்பிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தை மீண்டும் உருவாக்க விக்ரம் ஆர்வம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அக்கா தங்கை

அக்கா தங்கை

கடந்த சில நாட்களாக மீண்டும் இந்த படம் தொடங்கப் போவதாகவும், அதில் விக்ரமுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் முதன் முறையாக நடிக்கப் போவதாகவும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அக்‌ஷரா ஹாசன் ஏற்கனவே விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இருவரும் இல்லை

இருவரும் இல்லை

ஆனால், தற்போது இந்த படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் நடிக்கப் போவதாக வெளியான தகவல் அனைத்தும் வதந்தி தான் என்றும், தயாரிப்பு தரப்பில் இருந்து அவர்களிடம் எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே போல, விஜய்சேதுபதியின் லாபம் படத்தில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன், தனது அடுத்த படம் குறித்த எந்தவொரு திட்டத்தையும் இந்த ஆண்டு இறுதி வரை எடுக்கப் போவதில்லை என்ற முடிவில் இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேரடியாக ஆன்லைனில்

நேரடியாக ஆன்லைனில்

ஸ்ருதி ஹாசன் மற்றும் ரவி தேஜா நடிப்பில் உருவான தெலுங்கு படமான கிராக் படம் OTT இயங்கு தளத்தில் ரிலீஸ் செய்ய தயாராகி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தெலுங்கில் வைரலாகி வரும் ஆஹா ஆப்பில் அந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என டோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X