Thalaivar 171: சிவகார்த்திகேயன் இல்லையாம்.. அந்த ஹீரோ தான் ரஜினிக்கு வில்லனா?.. செட் ஆகுமா?
சென்னை: வேட்டையன் படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 வது படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா, தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா மற்றும் லிவிங்ஸ்டன் போன்ற பிரபலங்கள் நடித்த லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரைக்கு வந்தது. இதுவரை அந்த படம் ஒட்டுமொத்தமாக 15 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா நிறுவனம் பிளாக்பஸ்டர் என பதிவிட்டால் வசூல் நிலவரம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் மெகா பிளாக்பஸ்டர்: கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் அனிருத் இசையில் தமன்னாவின் காவலா ஆட்டத்தால் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டு 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் உச்சகட்ட சந்தோஷத்தில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு சொகுசு கார்களையும் காசோலை களையும் பரிசாக வழங்கினார்.
லால் சலாம் லாஸ்: ஜெயிலர் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற நிலையில், அதன் ஒரு துளி நமக்கு கிடைத்தாலே லால் சலாம் வசூல் ஈட்டி விடும் என எதிர்பார்த்த லைக்கா நிறுவனத்துக்கு பேரதிர்ச்சியாக அந்தப் படத்தின் வசூல் மாறிவிட்டது. ஆனால் வேட்டையின் திரைப்படம் இதை சரி செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் இல்லை: அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 161 வது படத்தின் ரஜினிக்கு வில்லனாக சிவகார்த்திகேயன் நடிக்க போவதாக தகவல் ஒன்று உலாவியது. இது உலகமகா உருட்டா இருக்கிறதே என யோசித்து வந்த நிலையில், அது வெறும் உருட்டு தான் என்றும் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் தான் நடிக்கப் போகிறார் என மற்றும் ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.
வெயிட்டா வரும்: தலைவர் 171 படத்தில் மேலும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரலில் தேர்தல் வரவுள்ள நிலையில் தீபாவளிக்கு தான் அந்த படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் 60% படம் சூட்டிங் முடிந்துள்ளதாக கூறி இருந்தார். வேட்டையின் படத்தின் படப்பிடிப்பு முடிய மே மாதம் வரை எடுத்துக்கொள்ளும் என தெரிகிறது. அதன் பின்னர் தான் தலைவர் 1711 வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











