twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தானா சேர்ந்த கூட்டம் டீம் செய்த புதுமை... பாராட்டிய சென்சார் போர்டு!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

    இந்தச் சந்திப்பில் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு பேசினர்.

    'தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு புதுமையைச் செய்திருப்பதாகவும், சென்சார் போர்டு அதிகாரிகளே ஆச்சரியமாக பார்த்ததாகவும் சூர்யா தெரிவித்தார்.

    மூவருக்கும் வரவேற்பு

    மூவருக்கும் வரவேற்பு

    இந்த சந்திப்பில் பேசிய சூர்யா, "எங்க இன்டஸ்ட்ரியில் இருந்து அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்க இருக்கும் ரஜினி சார், கமல் சார், விஷால் அவர்களுக்கும் அவங்க எல்லோரோட வரவும் நல்வரவா இருக்கும். அவங்களுக்கு நாங்க எல்லோரும் கண்டிப்பா ஆதரவு கொடுப்போம்.

    ஸ்பெஷல் 26 இல்லை

    ஸ்பெஷல் 26 இல்லை

    'ஸ்பெஷல் 26' படத்தை நான் பார்த்திருக்கேன். இந்தப் படம் 'ஸ்பெஷல் 26' கதைக்குள்ளேயே போகலை. விக்னேஷ் சிவன் சொன்ன 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் கதை வேற வேற ரூட்டுல போச்சு. முதல் சந்திப்பிலேயே கதை சொல்லி இம்ப்ரெஸ் பண்ணிட்டார்.

    நோ ஸ்மோக்கிங் கார்டு இல்லை

    நோ ஸ்மோக்கிங் கார்டு இல்லை

    இந்தப் படத்தில் 'நோ ஸ்மோக்கிங், லிக்கர் இஸ் இஞ்ஜூரியஸ் டு ஹெல்த்' டைட்டில் கார்டு பயன்படுத்தவே இல்லை. இந்தப் படத்தில் அப்படி எந்தக் காட்சிகளும் இருக்காது. சென்சார் போர்டு அதிகாரிகளே இப்படி டைட்டில் கார்டு இல்லாம படம் பார்த்து ரொம்ப நாளாச்சுனு ஆச்சரியப்பட்டு பாராட்டினாங்க.

    முதல் நாளே பார்க்கணும்

    முதல் நாளே பார்க்கணும்

    என் படங்களை முதல் நாள் தியேட்டரில் பார்க்கமாட்டேன். ஆடியன்ஸ் ரியாக்‌ஷன் எப்படி இருக்குமோனு பயப்படுவேன். ஆனா, இந்தப் படத்தை முதல் நாளே பார்க்கலாம்னு இருக்கேன். இந்தப் படம் அந்தளவு எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு" எனப் பேசினார் சூர்யா.

    English summary
    Suriya, Keerthi Suresh starred 'Thaana Serndha koottam' press meet was held yesterday evening in Chennai. In this meeting, Suriya said, "We did not use No Smoking Cards in the film 'TSK'; So the Sensor Board officials wishes us".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X