Asuran dhanush:அசுரன் படத்தில் மகன் தனுஷை தூக்கிட்டாங்களாமே!
சென்னை: இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படம் ரொம்ப தாமதமா ஷூட்டிங் நடந்து வருதாம். இதனால் தயாரிப்பாளர் தரப்பில் படு அப்செட். தினமும் போன் போட்டு படம் எந்த அளவில் இருக்கிறது என்று நச்சரிக்க ஆரம்பிச்சு இருக்காங்களாம்.
என்ன பண்ணலாம்னு யோசிச்ச வெற்றி மாறன், படத்தில் அப்பா மகன் கேரக்டரில் நடிக்கும் தனுஷின், மகன் தனுஷை தூக்கிடலாம்னு முடிவு பண்ணி, அதற்கேற்ப திரைக்கதையில் சின்ன மாற்றம் செய்து, பரபரப்பாக ஷூட்டிங் நடந்து வருதாம்.
அப்பா கேரக்டரையே மூணு வயதுக்கான காலக்கட்டத்தில் நடிக்கறதுனால அதில் நல்ல ஸ்கோர் பண்ணிடலாம்னு வெற்றி மாறன் முடிவெடுத்துட்டாராம். இதை தனுஷிடம் சொன்னபோது அவர் எதுவும் ரீஆக்ஷன் காமிக்கலையாம்.

வெற்றி கூட்டணி
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி எப்போதுமே வெற்றிக் கூட்டணியாத்தான் இருந்திருக்கு. என்னதான் சிறந்த நண்பர்கள் என்று தனுஷும், வெற்றி மாறனும் இருந்தாலும், சிம்புவை வச்சு படம் பண்ணப் போறேன்னு சொன்னப்போ கொஞ்சம் மூட் அப்செட் ஆனவர்தான் தனுஷ். ஆனால், அதை கை விட்டுட்டார் வெற்றிமாறன்.

எதுக்கு தனுஷ்
மகன் கதாபாத்திரத்தை தூக்கிட்டோம்னு சொன்னதுக்கு தனுஷ் பதில் சொல்லமலே போனது ஏன்னு குழம்பிக் கிடந்தாராம் வெற்றிமாறன். தனுஷிடம் இதுக்கு குறித்து கேட்பதற்கும் இடமில்லாமல் தனுஷ் அடுத்த நாளிலிருந்து மிக இயல்பாக நடந்துக்கிட்டாராம். ஷூட்டிங் பத்தி மட்டுமே பேசிக்கொண்டு இருந்தாராம்.

இனியும் சொல்லாமல்
போதும்டா சாமி இனியும் விளக்கம் சொல்லாமல் இருக்கக் கூடாதுன்னு முடிவெடுத்த வெற்றிமாறன், சார், அந்த மூணு கேரக்டரிலேயே நீங்க வெரைட்டி காமிக்கற மாதிரி எனக்கு பண்ண தெரியாதா சார். நீங்க மகன் கதாபாத்திரம் விட்டுப் போச்சேன்னு எதுவும் நினைக்காதீங்க. அதை நிவர்த்தி செய்து, உங்க ரசிகர்கள் ரசிக்கற மாதிரி படம் எடுப்பேன்னு சொன்னாராம்.

வெற்றிமாறன் தோளில்
தனுஷ் உடனே வெற்றிமாறன் தோளில் தட்டி உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா ..நீ சொன்னவுடனே எதுவும் பேசாமலிருந்து,மகன் கேரக்டர் இல்லாமல்ப டம் எப்படி இருக்கும், அதற்கு நாம் எப்படி நடிக்கணும்னுதான். தயாரிப்பாளர் தரப்பு, இயக்குநர் தரப்பு கஷ்டம் தெரியாதவனா நான்னு கேட்டாராம். தனுஷ் உண்மையிலேயே பெரிய மனதுக்கு சொந்தக்காரர்தான்!


Click it and Unblock the Notifications











