'கடவுள் இருக்கான் குமாரு'.. ஆனால் கையில் 'பாட்டில்' இல்லையாமே குமாரு... ஆச்சர்யம், ஆனால் உண்மை!

சென்னை: ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படத்தில் டாஸ்மாக் காட்சிகளே கிடையாது என நம்ப முடியாத தகவலைத் தெரிவித்துள்ளார் அதன் இயக்குநர் ராஜேஷ்.

நகைச்சுவைப் படங்களுக்கு பேர் போனவர் இயக்குநர் ராஜேஷ். இவரது சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, வாசுவும் சரவணனனும் ஒண்ணாப் படிச்சவங்க போன்ற படங்கள் காமெடிக்கு பேர் போனவை.

ஆனால், இவரது படத்தில் காமெடிக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ, அதே அளவுக்கு மது குடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும்.

கடவுள் இருக்கான் குமாரு...

கடவுள் இருக்கான் குமாரு...

இந்நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷை நாயகனாக்கி ‘கடவுள் இருக்கான் குமாரு' என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜேஷ். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசை...

இசை...

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்திருக்கிறார்.

டாஸ்மாக் காட்சிகளே நோ...

டாஸ்மாக் காட்சிகளே நோ...

இப்படம் முழுக்க பயணத்திலேயே அமைந்திருக்கும் கதையாம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கும் படம், பாண்டிச்சேரி, கோவா என பயணிக்கிறதாம். சரக்கிற்குப் பேர் போன பாண்டிச்சேரி, கோவா போன்ற பகுதிகளில் நடைபெறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள போதும் படத்தில் டாஸ்மாக் காட்சிகளே இல்லையாம்.

இறுதிகட்ட பணிகள்...

இறுதிகட்ட பணிகள்...

இது குறித்து இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், "என்னுடைய முந்தைய படங்களில் இடம் பெற்ற டாஸ்மாக் காட்சிகள் ஏதும் இப்படத்தில் இருக்காது. என்னுடைய முந்தைய படங்களை போல் இப்படமும் 'யு' சான்றிதழ் படமாக இருக்கும். படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

தீபாவளி ரிலீஸ்...

இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ராஜேஷ் உறுதி செய்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும் போதே நிச்சயம் இப்படமும் காமெடி விருந்து வைக்கும் என நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X