»   »  பாகுபலி 2... தமிழகத்தில் வரிவிலக்கு இல்லை!

பாகுபலி 2... தமிழகத்தில் வரிவிலக்கு இல்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் அதிகப்படியான பொருட்செலவில் உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 'பாகுபலி-2' வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.

பாகுபலி 1 எந்த சிக்கலுமில்லாமல் தமிழகத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது. ஆனால் இந்த 2ம் பாகம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் படத்துக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள்.

No tax free for Bagubali 2

ஒரு வழியாக வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழகத்தில் நேற்று பாகுபலி 2 தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் அளித்தனர்.

படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்திருப்பதால் தமிழகத்தில் வரிச்சலுகை கிடைப்பது சாத்தியமில்லாமல் போயிருக்கிறது. இதனால் படக்குழு எதிர்பார்த்த வசூலில் மாற்றம் ஏற்படும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே ரூ 20 கோடி பற்றாக்குறையால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியுமா என தடுமாறி வருகின்றனர் படத்தை வாங்கியவர்கள். இப்போது வரிச் சலுகையும் இல்லை.

    English summary
    Due UA certificate, Bagubali 2 fails to get Tax free from Govt of Tamil Nadu.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil