»   »  நடிகர் சங்கத்திற்காக டிராமா போடும் விஷால்: தல, தளபதிக்கு அழைப்பு இல்லை

நடிகர் சங்கத்திற்காக டிராமா போடும் விஷால்: தல, தளபதிக்கு அழைப்பு இல்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட போடப்பட உள்ள பிரமாண்ட நாடகத்திற்கு அஜீத், விஜய்யை அழைக்கப் போவது இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி வசூலிக்கும் வகையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் கூடுதல் நிதி திரட்ட பிரமாண்ட நாடகத்தை நடத்த நடிகர் சங்க தலைவர் நாசர் திட்டமிட்டுள்ளாராம்.

No Thala, Thapathy in Nadigar sangam's drama: Vishal

இது குறித்து விஷால் கூறுகையில்,

நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்ட மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளில் பிரமாண்ட நாடகத்தை நடத்த உள்ளார் நாசர். அதில் நான் இருக்கிறேனா என தெரியவில்லை. ஆனால் கமல் சார் நிச்சயம் இருப்பார்.

ரஜினி சார் போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அஜீத்தை அழைக்க வாய்ப்பே இல்லை. நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டதற்கே விஜய் வரவில்லை. அதனால் நாடகத்திற்கும் அவரை அழைக்கப் போவது இல்லை என்றார்.

English summary
Vishal said that he is not going to invite Ajith and Vijay for the Nadigar Sangam drama which will be staged to raise fund for the sangam building.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil