தளபதி விஜய்யுடன் வீடியோ கால்.. மேக்கப் அதிகம் என மாளவிகா மோகனனை கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: தளபதி விஜய்யுடன் நடிகர் மாளவிகா மோகனன் பேசியுள்ள வீடியோ கால் புகைப்படத்தை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

Recommended Video

Thalapathy Vijay First Ever Video Call | Master | Malavika Mohanan

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து நடிகர்களும் வீட்டில் ஓய்வில் இருக்கின்றனர்.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

கடந்த மாதம் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் அப்டேட்டுக்காகவும், ரிலீசுக்காகவும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் எப்போது காலடி எடுத்து வைத்ததோ, ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் ஆப்பு வைத்து விட்டது. ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த படக்குழு தற்போது ஜூன் மாதத்திற்கு ரிலீஸை தள்ளி வைத்துள்ளது.

அமைதி காக்கும் விஜய்

அமைதி காக்கும் விஜய்

கொரோனா நிவாரண நிதியாக பவன் கல்யாண் 2 கோடி, பிரபாஸ் ஒரு கோடி, மகேஷ் பாபு ஒரு கோடி, ராம் சரண் 70 லட்சம், FEFSI தொழிலாளர்கள் நலனுக்காக ரஜினி 50 லட்சம், தனுஷ் 15 லட்சம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி தலா 10 லட்சம் அளித்து வரும் நிலையில், கொரோனா விழிப்புணர்வு குறித்தோ, நிவாரணம் குறித்தோ நடிகர் விஜய், அஜித் உள்ளிட்டோர் வாய் திறக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.

விஜய்யுடன் வீடியோ கால்

மாஸ்டர் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன், தனது ட்விட்டர் பக்கத்தில், தளபதி விஜய், அனிருத், ஜகதிஷ் ப்ளிஸ் ஆகியோருடன் வீடியோ காலில் க்ரூப் சேட்டிங் செய்த ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். வீடியோ காலில் விஜய்யை பார்த்த ரசிகர்கள், அந்த புகைப்படத்தை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

விருப்பமில்லையா விஜய்

மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன், அனிருத், விஜய் பேசும் வீடியோ காலை பார்த்த இந்த ரசிகர், வீடியோ கால் எல்லாம் சூப்பராத்தான் இருக்கு, கொரோனா வைரஸுக்காக விழிப்புணர்வு வீடியோ போட சொல்லி பலரும் கேட்கிறாங்க, நீங்க ஏன் எதுவும் சொல்லவில்லை என இந்த இந்த ரசிகர் ட்வீட் போட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

கலாய்த்த ரசிகர்

வீட்டில் இருந்த படி சோஷியல் டிஸ்டன்ஸை மாஸ்டர் குழு மெயிண்டெயின் செய்வதாக மாளவிகா பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், வீட்டில் இருக்கும் போதும் இவ்வளவு மேக்கப் தேவையா? என கேட்டு கலாய்த்துள்ளார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், நான் மேக்கப்பே போடல, அது இயற்கை அழகு என பதிலளித்துள்ளார்.

லோகேஷ் எங்கடா

இந்த க்ரூப் வீடியோ காலில், மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மாஸ்டர் ரைட்டர் ரத்னகுமார் எங்கடா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், தளபதி விஜய் நல்லா இருக்காரா? பார்த்து பத்திரமா வீட்டுலயே இருக்க சொல்லுங்க, நீங்களும் பாதுகாப்பா இருங்க என தளபதி ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

நம்பர் கொடுங்க

விஜய் அண்ணா நம்பர் கொடுத்தா நாங்களும் போன் பண்ணி வீடியோ கால் பேசுவோம்ல.. ப்ளீஸ் மாளவிகா விஜய் அண்ணா நம்பர் கொடுங்க என்றும், உங்க நம்பர் கொடுங்க, நாங்களும் சோஷியல் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்றோம் என பல குறும்புத்தனமான ரசிகர்கள் கமெண்ட் செய்து மாளவிகா மோகனை ஓட்டி வருகின்றனர்.

செம கிளாமர்

செம கிளாமர்

தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் செம கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X