என்னா ஃபைட்... என்னா பாய்ச்சல்... டிரைலரில் அசத்துறார் பாண்ட், குஷியில் ரசிகர்கள்!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: நோ டைம் டு டை என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தின் டிரைலர், வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

பாண்ட் பட வரிசையில் அடுத்ததாக வருகிறது, நோ டைம் டு டை. டேனியல் கிரேக், ரால்ஃப் பியன்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், லஷனா லின்ச் உட்பட பலர் நடிக்கின்றனர்.

 ‘No Time To Die’ movie trailer has been released

தொடர்ந்து நான்கு பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரேக், இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார் முதலில். இதனால், இட்ரிஸ் எல்பா என்ற நடிகர், பாண்ட் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பாண்ட் கேரக்டரில் நடிக்கும் முதல் கறுப்பின ஹீரோ அவர்தான் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இதுதான் என் கடைசி பாண்ட் படம் என நடிக்கச் சம்மதித்தார் கிரேக். படத்தை ஸ்லம்டாக் மில்லினர் இயக்குனர் டோனி பாய்ல் (danny boyle) இயக்குவதாக இருந்தது. பாண்ட் கேரக்டர் இறப்பது போன்ற கிளைமாக்ஸை மாற்றச் சொன்னார் பாய்ல். உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்ட ஹீரோவை அப்படி சாகடிக்கக் கூடாது என்றார், ரசிகனாக. கதாசிரியர் மறுத்ததால் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார், ரோசக்கார பாய்ல். பின்னர் கேரி ஜோஜி புகுனகாவை இயக்குனராக்கியது தயாரிப்பு.

 ‘No Time To Die’ movie trailer has been released

இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்தது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இதன் முதல் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 2 நிமிடம் 36 நொடி ஓடும் இந்த டிரைலரில் ஆக்‌ஷன் காட்சிகள் அசரடிக்கிறது. வழக்கமாக, பாண்ட் படங்களில் வருவதைப் போல, பறக்கும் துப்பாக்கிக் குண்டுகள், சேஸிங், ஆவேசம் என அசத்துகிறது டிரைலர். சமூக வலைத்தளங்களிலும் யுடியூப்பிலும் இந்த டிரைலர் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஏற்கனவே, கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பக்டர் ஆகிய பாண்ட் படங்களில் நடித்திருந்த டேனியல் கிரேக்-க்கு இதுதான் கடைசி பாண்ட் படம். அடுத்து, பாண்ட் கேரக்டரில் நடிக்கப் போவது நடிகை லஷனா லின்ச். அவர் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X