twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனிமேல் மாற்றமில்லை.. ஒரு வழியாக ரிலீஸ் தேதியை உறுதி செய்த ஜேம்ஸ் பாண்ட் படக்குழு!

    : கொரோனா பாதிப்பு.. தள்ளிப் போனது ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ரிலீஸ்!

    |

    லண்டன்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டு டை படத்தின் ரிலீஸ் தேதி கடந்த ஆண்டு பல முறை மாற்றப்பட்டது.

    டேனியல் கிரெய்க், ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் கடைசி படமான நோ டைம் டு டை படத்தின் உறுதி செய்யப்பட்ட ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

    பிக்பாஸ் நட்சத்திரங்களுடன் இணைந்த பிரபல இயக்குநர்.. மிரட்டலாக தயாராகும் 3.33! பிக்பாஸ் நட்சத்திரங்களுடன் இணைந்த பிரபல இயக்குநர்.. மிரட்டலாக தயாராகும் 3.33!

    இந்த படத்தின் டீசர் பல மில்லியன் பார்வைகளை கடந்து வைரலானது குறிப்பிடத்தக்கது.

    உலக ஃபேமஸ்

    உலக ஃபேமஸ்

    துப்பறியும் நாவல்கள் உலகளவில் ஃபேமஸ் ஆன காலக்கட்டத்தில் துப்பறியும் ஏஜென்ட்டாக, ரகசிய போலீஸ் ஆக எதிரிகளை துவம்சம் செய்த ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகி உலகளவில் ரசிகர்களை வியக்க வைத்தது. 007 நம்பரும் அந்த ஜேம்ஸ் பாண்ட் மியூசிக்கும் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்.

    கடைசி படம்

    கடைசி படம்

    கடந்த 2006ம் ஆண்டு வெளியான கேசினோ ராயல் திரைப்படத்தின் மூலம் புதிய ஜேம்ஸ் பாண்டாக அறிமுகமான நடிகர் டேனியல் கிரெய், ஆளை விடுங்கடா சாமி என கெஞ்சியும் அவரை வைத்து எடுத்துள்ள படம் தான் நோ டைம் டு டை. மேலும், இதற்கு மேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்து விட்டார்.

    கொரோனா பார்த்த வேலை

    கொரோனா பார்த்த வேலை

    இயக்குநர் கேரி ஜோஜி புகுனகா இயக்கத்தில் உருவாகியுள்ள நோ டைம் டு டை படத்திற்கு பல சவால்கள் எழுந்த நிலையில், ஒருவழியாக ரெடியான படத்தையும் கடந்த ஒரு வருடமாக ரிலீஸ் செய்ய விடாமல் கொரோனா வைரஸ் பாடாய் படுத்தி எடுத்து விட்டது.

    கன்ஃபார்மா ஆகிடும்

    கன்ஃபார்மா ஆகிடும்

    கடந்த ஆண்டு ஏப்ரலுக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் ரிலீஸ் தேதி நவம்பர் மாதம் தள்ளிப் போனது. ஆனால், நவம்பர் மாதமும் படத்தை வெளியிடாத படக்குழு 2021ம் ஆண்டு வந்தும் எப்போது ரிலீஸ் என்பதை சொல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது கன்ஃபார்மா வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி உலகளவில் நோ டைம் டு டை படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அக்டோபர் 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வசூல் முக்கியம் பாண்டு

    வசூல் முக்கியம் பாண்டு

    பல நூறு கோடிகள் செலவில் எடுக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட் படத்தை எல்லாம் ஒடிடி நிறுவனங்கள் கனவில் நினைத்தால் கூட வாங்க முடியாது. உலகளவில் தியேட்டர்களை படத்தை வெளியிட்டு வசூல் செய்தால் மட்டும் தான் ஆயிரக் கணக்கான கோடி வசூலை பெற முடியும். அதனால் தான் இத்தனை தாமதம்.

    English summary
    The global release of the new James Bond film "No Time to Die" was postponed on September 30 2021.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X