மிரளவைக்கும் பிரம்மாண்டம்.. கிரெய்கின் அதிரடியில் மிரட்டுது ட்ரைலர்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் 5வது படமும் கடைசி படமுமான No Time To Die படத்தின் அட்டகாசமான 2வது ட்ரைலர் தற்போது வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது.

Recommended Video

மிரட்டும் கொரோனா.. கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய லயோலா கல்லூரி மாணவர்கள்!

ஜேம்ஸ் பாண்ட் வரிசை படங்களின் 25வது படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

ட்ரைலரை பார்க்கவே 200 ரூபாய் டிக்கெட் கொடுக்கலாம் போல, அந்த அளவுக்கு மிரட்டலாக இருக்கிறது. வரும் நவம்பர் மாதம் தியேட்டரில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிக்க மாட்டேன்

நடிக்க மாட்டேன்

ஜேம்ஸ் பாண்டாக நடிக்க முடியவில்லை, இதற்கு மேல் 007 கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என அடம் பிடித்த ஆக்‌ஷன் மன்னன் டேனியல் கிரெய்கை 5வது முறையாக ஜேம்ஸ் பாண்டாக நடிக்க வைத்து, ஒட்டுமொத்த உயிரையும் உருவி எடுத்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் அனல் பறக்கின்றன.

இயக்குநர் மாற்றம்

இயக்குநர் மாற்றம்

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை இயக்கி 8 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இயக்குநர் டேனியல் பாயலை வைத்து தான் இந்த படத்தை இயக்க முதலில் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், க்ரியேட்டிவ் விவகாரத்தில் நடந்த சர்ச்சை காரணமாக டேனி பாயல் வெளியேறினார். அதன் பின்னர், HBO-வில் வெளியான ட்ரூ டிடெக்டிவ் சீரிஸை இயக்கிய கேரி ஜோஜி ஃபுகு நாகாவிடம் இந்த படத்தை இயக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

இரண்டாவது ட்ரைலர்

இரண்டாவது ட்ரைலர்

தற்போது அதிர வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி உள்ள நோ டைம் டு டை படத்தின் இரண்டாவது மெர்சலான ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. பறக்கும் கார்கள், இறக்கை விரித்து பறக்கும் விமானம், என காட்சிக்கு காட்சி பிரம்மிப்பின் உச்சம் தெரிகிறது. அதற்கு மேல், டேனியல் கிரெய்கின் உச்சகட்ட ஸ்டன்ட் காட்சிகள், இதயத்தை நடுங்க வைக்கின்றன.

ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

கடந்த மார்ச் மாதமே இந்த படம் ரிலீசாகி இருக்க வேண்டியது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் தேதியை அப்போதே நவம்பருக்கு படக்குழு தள்ளி வைத்தனர். சமீபத்தில் டெனெட் திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போடுவதால், நவம்பர் ரிலீஸை மீண்டும் படக்குழு உறுதி செய்துள்ளது. வரும் நவம்பர் 20ம் தேதி அமெரிக்காவிலும், அதற்கு முன்னதாக நவம்பர் 12ம் தேதி இங்கிலாந்திலும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X