விஜய் படத்தில் வடிவேலுவா, யார் சொன்னது?: படக்குழு

By Siva

சென்னை: அட்லீ விஜய்யை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்குமாறு வடிவேலுவிடம் கேட்கவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர் தற்காப்பு கலை வீரராக வருகிறாராம். இதற்கென மெனக்கெட்டு பயிற்சி எடுத்து வருகிறார் விஜய். படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

மேலும் படத்தில் வரும் தந்தை கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை வேறு கூட்ட உள்ளாராம்.

அட்லீ

அட்லீ

புலி படத்தை அடுத்து விஜய் ராஜா ராணி புகழ் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

வடிவேலு

வடிவேலு

வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி பண்ண வேண்டும் என்று விஜய் அட்லீயிடம் தனது ஆசையை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

தாணு

தாணு

அட்லீ இயக்கும் படத்தை தயாரிக்கும் தாணு வடிவேலுவை அணுகி விஜய்யின் ஆசையை தெரிவித்து படத்தில் நடிக்குமாறு கூறி ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியது.

இல்லை

இல்லை

வடிவேலுவை சந்தித்து படத்தில் நடிக்குமாறு கேட்கவில்லை. அப்படி இருக்கையில் அவர் எப்படி இந்த படத்தில் நடிக்கிறார் என்று கூற முடியும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சமந்தா, ஏமி

சமந்தா, ஏமி

அட்லீ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும், ஏமி ஜாக்சனும் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X