பெரிய ஹீரோயினாகும் ஆசையில்லை... கண்ணீர் விடும் பாவனியின் வைரல் ப்ரோமோ

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 துவங்கி கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இந்த முறை பெரும்பாலான அறிமுகமில்லாத முகங்களே போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

Bigg Boss Pavani Reddy-ன் இரண்டாவது திருமண வாழ்க்கையும்? | Kamal Hassan

இருந்தாலும் தற்போது வரையிலான மூன்று நாட்களில் சென்டிமென்ட் அழுகை இழுந்தாலும், காமெடிகள் அதிகம் இருப்பதால் ரசிகர்கள் நிகழ்ச்சியை ரசிக்க துவங்கி உள்ளனர். அதிலும் போட்டியாளர்களின் பாசிடிவ் மற்றும் மோடிவேட் பேச்சுக்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

கொழுத்தி போட்ட பிக்பாஸ்

கொழுத்தி போட்ட பிக்பாஸ்

கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, தாங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள், சந்தித்த தடைகள், கஷ்டங்கள் பற்றி மனம் திறந்து ஹவுஸ்மேட்களிடம் கூற வேண்டும் என முதல் டாஸ்க் கொடுத்துள்ளார் பிக்பாஸ். அந்த கதையை கேட்டு விட்டு ஹவுஸ்மேட்ஸ் லைக், டிஸ்லைக், ஹார்ட் எமோஜிக்கள் தர வேண்டும் என கொளுத்தி போட்டுள்ளார் பிக்பாஸ்.

ஹார்ட் அள்ளி சுருதி

ஹார்ட் அள்ளி சுருதி

இதன்படி முதல் ஆளாக இசைவாணி தனது கதையை கண்ணீருடன் பகிர்ந்தார். அவரைத் தொடர்ந்து சின்னபொண்ணு, இமான் அண்ணாச்சி, சுருதி ஆகியோர் தங்கள் கதைகளை பகிர்ந்தனர். சுருதியின் கதை பலரையும் கவர்ந்ததால் அதிகபட்சமாக 9 பேர் ஹார்ட் கொடுத்தனர். பிரியங்கா பிக்பாஸை கழுவி ஊற்றி கலாய்ப்பது, தாமரை செல்வியின் வெள்ளந்தியான பேச்சு, ராஜுவின் காமெடி போன்றவை ரசிக்க வைத்துள்ளது.

ப்ரோமோவின் அசத்தும் விஜய் டிவி

ப்ரோமோவின் அசத்தும் விஜய் டிவி

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்ட தினமும் 4 ப்ரோமோக்களை வெளியிட்டு, விஜய் டிவி அசத்தி வருகிறது. நேற்று சண்டை துவங்குவது போல் ப்ரோமோவை காட்டி டிஆர்பி.,யை ஏற்றினார்கள். இதைத் தொடர்ந்து இன்று நான்காம் நாளுக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

கதறி அழும் நமீதா

கதறி அழும் நமீதா

இன்று வெளியிடப்பட்ட முதல் ப்ரோமோவில் நமிதா மாரிமுத்து, கதறி அழுத படி தனது கதையை சொல்கிறார். இதனை கேட்டு ஹவுஸ்மேட்களும் கதறி அழுகிறார்கள். திருநங்கைகளான நாங்கள் மாறி விட்டோம், சமுதாயம் தான் மாற வேண்டும் என்ற நமீதாவின் பேச்சு அனைவரையும் கவர்ந்து விட்டது.

ஹீரோயினாகும் ஆசையில்லை

ஹீரோயினாகும் ஆசையில்லை

இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், பாவனி ரெட்டி, மதுமிதாவிடம் தனது கதையை சொல்லி அழுது கொண்டிருக்கிறார். எனக்கு பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. வாழ்ந்தால் போதும் என்கிறார். பாவனி அழுவதை பார்த்து விட்டு வரும் பிரியங்கா, ஏன் அழுகிறார் என கேட்கிறார். இல்லை என சமாளிக்கிறார் பாவனி.

ஆந்திரா சாப்பாடு வேணும்

ஆந்திரா சாப்பாடு வேணும்

அதற்கு பிரியங்கா, நீ அழுவதை பார்த்து விட்டு தான் வந்தேன். என்ன பசிக்குதா என்கிறார். அதற்கு பாவனி, எனக்கு ஆந்திரா சாப்பாடு சாப்பிடனும் போல இருக்கு என்றார் குழந்தைத்தனமாக. இதற்கு பதிலளிக்கும் பிரியங்கா, அப்டின்னா காரம் என்ற பெயரில் அண்ணாச்சி ஏதோ எழுதி வைத்துள்ளார். அதற்குள் நேரடியாக உன் நாக்கை விடு. இனி ஆந்திரா சாப்பாடு சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே உனக்கு வராது என்கிறார்.

பாவனியை ஆதரிக்கும் ரசிகர்கள்

பாவனியை ஆதரிக்கும் ரசிகர்கள்

இந்த ப்ரோமோ வெளியிடப்பட்ட 5 நிமிடங்களுக்குள் 2000 க்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர். 100 பேர் கமெண்ட் செய்துள்ளனர். பாவனி சோ க்யூட். பாவனி be strong என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதிகமானவர்கள் அபிஷேக்கை கலாய்த்து தான் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X