விஜய் ரசிகர்கள் இருக்கும் வரை விஜய்யை ஒண்ணுமே பண்ண முடியாது...சொல்வது யார் ?

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது பீஸ்ட்

பூஜா ஹெக்டே,யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ள பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் இருக்கும் வரை விஜய்யை ஒண்ணுமே பண்ண முடியாது என பிரபல விமர்சகர் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் மார்க்கெட்

விஜய்யின் மார்க்கெட்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

பீஸ்ட்

பீஸ்ட்

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது லாக் டவுனுக்கு பிறகு வெளியான முதல் பெரிய படமாக இருந்தாலும் மாஸ்டர் சக்கை போடு போட்டு வசூலை குவித்தது. நாளுக்கு நாள் விஜய்யின் மார்க்கெட் மற்ற மொழிகளிலும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கோலமாவு கோகிலா,டாக்டர் என இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் பீஸ்ட்

நெல்சன் இயக்கத்தில்

நெல்சன் இயக்கத்தில்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகி வந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருப்பார். கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட படங்களில் நெல்சன் இயக்கத்தில் நடித்த காமெடி நடிகர்கள் அனைவரும் இதில் நடித்திருந்தனர். குறிப்பாக யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி காமெடி காமெடியன்களாக நடித்து இருந்தார்கள்.

விஜய்யை ஒண்ணுமே பண்ண முடியாது

விஜய்யை ஒண்ணுமே பண்ண முடியாது

முழுக்க முழுக்க ஆக்ஷன் + காமெடி கதை களத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் எந்த குறையும் வைக்காமல் வாரி குவித்து வருகிறது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி கூறியதாவது விஜய் ரசிகர்கள் இருக்கும் வரை விஜய் ஒன்றுமே செய்ய முடியாது . கன்னட படங்கள் இதுவரை கர்நாடகாவிற்கு உள்ளேயே இருந்தது இப்பொழுது அந்த தடைகளை உடைத்து கேஜிஎஃப் திரைப்படம் மற்ற மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் வேறு எந்த நடிகருக்கும் கிடையாது. விஜய் ரசிகர்கள் இருக்கும் வரை அவரை ஒன்றுமே பண்ண முடியாது பீஸ்ட்டுக்கு அப்புறம்தான் கேஜிஎஃப் என சினிமா விமர்சகர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X