twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தடை நீங்கியது.. அலைகடலென மெர்சலை ரசிக்க தடபுடலாகத் தயாராகும் ரசிகர்கள்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில், 'மெர்சல்' படத்தை வெவ்வேறு சிக்கல்கள் சூழ்ந்தன.

    படத்தின் டைட்டில் பிரச்னையில், வழக்குத் தொடுத்த ராஜேந்திரன் என்பவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 'மெர்சல்' படத்துக்கு சென்சார் சான்றிதழ் பெறாத தகவல் வெளியானது.

    'மெர்சல்' படத்தைத் தொடரும் சிக்கல்களால் முன்னணி திரையரங்குகள் எதிலுமே 'மெர்சல்' டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது.

    தடையில்லா சான்றிதழ்

    தடையில்லா சான்றிதழ்

    இது தொடர்பான விலங்குகள் நல வாரியத்தின் அவசர ஆலோசனை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் பிரச்னை முடிவுற்று, 'மெர்சல்' படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தீபாவளிக்கு ரிலீஸ்

    தீபாவளிக்கு ரிலீஸ்

    தடையில்லா சான்றிதழ் பெற்றதையடுத்து, இன்று மாலைக்குள் சென்சார் சான்றிதழ் பெறப்பட்டு, படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சினிமா டிக்கெட் கட்டணம் அறிவிக்கப்பட்டால் இன்று மாலையிலிருந்து அனைத்து திரையரங்குகளிலும் 'மெர்சல்' டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டிக்கெட் புக்கிங்

    எல்லா சிக்கலும் சரியாகிடுச்சு. மெர்சல் டீம் சென்சார் சான்றிதழ் வாங்கும் முயற்சியில் இருக்காங்க. டிக்கெட் புக்கிங் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொடங்கலாம். விஜய் ரசிகர்கள் ரெடியா இருங்க.

    தேனாண்டாள் ஃபிலிம்ஸ்

    மெர்சல் ரிலீஸ் தொடர்பாக, தயாரிப்பாளரான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் ஒரு ட்வீட் போட்டா நல்லாருக்கும்.

    மெர்சல் அரசன்

    ஹே...Scene-னாவும் அவன் வன்ட்டான், பொடி இஸ்கூலு புள்ளிங்கலாம் செதரு, Theatre-u தெறிக்க, யாரிங்க கெலிக்க சொல்டி பிகிலடி, மெர்சல் அரசன் வாரான்.

    முதல்வருடன் சந்திப்பு

    நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்தார் : செய்தி

    இன்று மெர்சல் படத்துக்கு விலங்கு நல வாரியம் சான்றிதழ் வழங்கியது. அவ்வளவு தான்!

    மெர்சல் கதை?

    #மெர்சல் கதைன்னு சொல்லி ஒன்ன தூக்கிட்டு திரியுறானுங்க படம் ரிலீஸ் ஆனதும் விஜய் படத்துல கதையான்னு கேட்டு காமெடி பண்ணி சிரிச்சுக்குவாங்க

    மீச முறுக்கு

    ஊரு கண்ணு உறவு கண்ணு, உண்ண மொச்சு பாக்கும் நின்னு.. சின்ன மகராசன் வாறன் மீசமுறுக்கு..!

    சோதனை

    யானை, குரங்கு, நாய்ன்னு மிருகங்களை வைத்து படங்கள் எடுத்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ்க்கு ஒரு புறாவால் சோதனை ஏற்பட்டதை என்ன சொல்ல?

    English summary
    Animal Welfare Board of India has given NOC to 'Mersal' film, and the censor certification will be received later this evening and the film will be released to Diwali. Vijay fans are enthusiastically celebrating on Twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X