நடிகர் பொன்னம்பலத்துக்கு பிடிவாரன்ட்!

கரூர் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அன்புநாதன்(39). பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் இவர். இவரிடம் சொந்த தேவைக்காக நடிகர் பொன்னம்பலம் 2006 ஜனவரி முதல் தேதி ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கினாராம். கடன் தொகைக்கு 2006 பிப்ரவரி 20ம் தேதிக்கு பின்தேதியிட்ட கனரா வங்கி காசோலையை பொன்னம்பலம் வழங்கியிருந்தார்.
குறிப்பிடப்பட்ட தேதியில் வங்கியில் காசோலையை அன்புநாதன் செலுத்தியபோது, பொன்னம்பலத்தின் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியது. இது குறித்து பொன்னம்பலத்திடம் தகவல் அளித்தும், அவர் கடன் தொகையை அளிக்காமல் காலம் தாழ்த்தியதால் 2006 ஆகஸ்ட் 4ம் தேதி அவர் மீது கரூர் நீதித்துறை நடுவர் எண் இரண்டில் அன்புநாதன் வழக்கு தொடர்ந்தார்.
தொடர்ந்து விசாரணை நடந்தது. இன்று நடந்த விசாரணையில் நடிகர் பொன்னம்பலம் ஆஜராகததால், நீதிபதி ராமகிருஷ்ணன் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தார். வரும் மார்ச் 4ம் தேதிக்குள் பொன்னம்பலத்தை நீதிமன்றத்தில் ஆஜராக்க உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











