twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்திரன் கதை விவகாரம்.. இயக்குனர் ஷங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கவில்லை.. நீதிமன்றம்!

    By
    |

    சென்னை: எந்திரன் கதை தொடர்பான வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கவில்லை எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், 'எந்திரன்'.

    என் மகள் இவரின் தீவிர ரசிகை.. பிக்பாஸ் பிரபலத்தை கட்டியணைத்து போட்டோ போட்ட அர்ச்சனா! என் மகள் இவரின் தீவிர ரசிகை.. பிக்பாஸ் பிரபலத்தை கட்டியணைத்து போட்டோ போட்ட அர்ச்சனா!

    சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் டேனி டென்ஸோங்பா, கருணாஸ், சந்தானம் உட்பட பலர் நடித்திருந்தனர்.

    ஆருர் தமிழ்நாடன்

    ஆருர் தமிழ்நாடன்

    படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை, தன்னுடையை என்று கவிஞர் ஆருர் தமிழ்நாடன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு ஜுகிபா என்ற பெயரில் எழுதிய கதை, 'இனிய உதயம்' இதழில் வெளியானது.

    தித் திக் தீபிகா

    தித் திக் தீபிகா

    அதே கதை மீண்டும், தித் திக் தீபிகா என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியான பின்பு ஜுகிபா கதைதான் திருடப்பட்டு, எந்திரன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்ததாக அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    கிரிமினல் வழக்கு

    கிரிமினல் வழக்கு

    இது தொடர்பாக எந்திரன் இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் எழும்பூர் 13 வது நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு இயக்குனர் ஷங்கருக்கு,. எழும்பூர் 13 ஆவது நீதிமன்றம் 2011-ல் சம்மன் அனுப்பப்பியது.

    காப்புரிமை சட்டப்படி

    காப்புரிமை சட்டப்படி

    அந்த சம்மனை அடுத்து இயக்குனர் ஷங்கர் கதையைத் திருடவில்லை என்றும் கூறி, அந்த கிரிமினல் வழக்கு செல்லாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றத்தில் காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து வழக்கை நடத்தலாம் என்று உத்தரவிட்டது

    திரும்பப் பெறக்கோரி

    திரும்பப் பெறக்கோரி

    இந்த வழக்கு கடந்தமுறை எழும்பூர் 13 வது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 10 ஆண்டுகளாக வழக்கில் ஆஜராகாமல் இருப்பதால், இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகினது. இந்நிலையில் அந்த பிடிவாரண்ட்டை திரும்பப் பெறக்கோரி அவருடைய வழக்கறிஞர் சாய்குமரன் இன்று மனு தாக்கல் செய்தார்.

    மனு தேவையற்றது

    மனு தேவையற்றது

    இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், இயக்குனர் ஷங்கருக்கு எந்தவித பிடிவாரண்ட் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். எனவே பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரிய மனு தேவையற்றது என்றும் இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு கடந்தமுறை உத்தரவிட்டு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

    English summary
    The Egmore court said that Non bailable warrant has not been issued against director Shankar in connection to film Enthiran plagiarism case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X