தமிழில் சொந்தக் குரலில் பேசி நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கே முன்னுரிமை! - இயக்குநர்கள் சங்கம்

By Shankar

சென்னை: ஒழுங்காக கால்ஷீட் தராத மற்றும் ஒத்துழைப்பு தராத நடிகர் நடிகைகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என தீர்மானம் நிறைவேற்றப் போவதாக இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழில் பேசி நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கே முன்னுரிமை என்றும் இச்சங்கம் தன் தீர்மானத்தில் குறிப்பிட்டதுள்ளது.

Directors association

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் நிறைவேற்றப்பட உள்ள சில தீர்மானங்கள் விவரம்:

* நமது சங்க இயக்குநர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்கள் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொழிலாளர்கள் நல ஆணையர் முன்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்வாகிகள் கையெழுத்தானது. நமது சங்க உறுப்பினர்களுக்கு மாத வருமானம் உறுதியானது நம் சங்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

* வருடாவருடம் நம் இயக்குநர்கள் சங்கம் மூலம் 1000 கண் தானம் வழங்கப்படும்.

* இயக்குநர்கள் சங்க அலுவலகத்திற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இடம் கேட்டிருந்தோம். நமது கோரிக்கை நியாயமானது என்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் பதில் கூறியதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

* விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் வகுப்பு போல நமது சங்க உறுப்பினர்கள் குறும்படங்கள் எடுக்க இயக்குநர்கள் சங்கத்தில் இலவசமாக 5 டி கேமராக்கள், எடிட்டிங் மற்றும் ரீ ரெகார்டிங் வசதிகள் செய்து தரப்படும். நாளைய இயக்குநர்கள் போல் தங்களது குறும்படங்களை ஒரு சேனலில் பேசி ஏற்பாடு செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் குறும்பட விழாக்களில் அவர்களது குறும்படங்களும் இடம்பெற வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

* நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு ஒழுங்காக கால்சீட் கொடுக்க வேண்டும். தவறியவர்கள் மீது தொழில் ஒத்துழையாமை அமல்படுத்தப்படும்.

* தமிழில் சொந்தக் குரலில் பேசி நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

இயக்குநர் வீ சேகர் கொண்டு வந்துள்ள சில கூடுதல் தீர்மானங்கள்

* இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல் இனிமேல் இயக்குநராக, உதவி இயக்குநராக பணிபுரியமுடியாது.

* இயற்கை எய்தியவர்களுக்கு 1 லட்சம் நிதிநிலையை உயர்த்துதல்.

* உறுப்பினர்கள் அடையாள அட்டை காட்டினால் அதற்குத் தகுந்த கண்ணியமாக போலீசார் நடத்த வேண்டும். அதற்காக போலீஸ் கமிஷனரிடம் கடிதம் பெற வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X