டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!
காரைக்கால்: காரைக்காலில் நடந்த நடன நிகழ்ச்சிக்கு கவர்ச்சி நடிகை நமீதா வராத்தால் ஆத்திரமடைந்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பெரும ரகளை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்காலில் தனியார் அமைப்பு சார்பில் காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உங்களில் யார் அடுத்து லாரன்ஸ் என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக கடந்த 2 மாதங்களாக அந்த்த் தனியார் நிர்வாகம், நமீதா உள்ளிட்டோர் படங்களுடன் நிகழ்ச்சிக்கான அனுமதி கூப்பன் தயார் செய்து, விளம்பரதாரர்களின் விளம்பரங்களுடன் விநியோகம் செய்தது.
நமீதா உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி என காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர் விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் கூப்பன் படு விறுவிறுப்பாக விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. பெரும் திரளாக நமீதாவைத் தரிசிக்க டிக்கெட் வாங்கியவர்கள் குழுமினர். அனைவர் பார்வையும் நமீதா ஏறப் போகும் மேடை மீதே இருந்த்து.

லோக்கல் கலைஞர்கள் உள்ளிட்டோர் கச்சேரி நடத்தினர். அதெல்லாம் பார்வையாளர்களைக் கவரவில்லை.. நமீதா எங்கேப்பா என்ற எதிர்பார்ப்புடன் சீட் நுனியில் குந்தியிருந்தனர். இந்த நிலையில் திடீரென மேடையில் ஒரு அறிவிப்பு வெளியானது.
நமீதா வரவில்லை என்று கூறப்பட்ட அந்த அறிவிப்பால் அத்தனை பேரின் இதயத் துடிப்பும் சற்று நின்றே போனது. அதன் பின்னர் அது ஆத்திரமாக உருமாறியது, கோபம் கொப்பளிக்க அத்தனை பேரும் ரகளையில் குதித்தனர். சேர், நாற்காலிகளைத் தூக்கி சரமாரியாக வீசினர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். கொந்தளித்துக் கோபத்துடன் கத்தியவர்களை அமைதிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கூப்பன் விற்பனையில் பல லட்சம் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











