»   »  எங்களை யாராலும் தடுக்க முடியாது, ஏறி மிதிச்சு போய்க்கிட்டே இருப்போம்: விஷால்

எங்களை யாராலும் தடுக்க முடியாது, ஏறி மிதிச்சு போய்க்கிட்டே இருப்போம்: விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்களை யாராலும் தடுக்க முடியாது, ஏறி மிதித்து போய்க் கொண்டே இருப்போம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா சென்னை தியாகராய நகரில் இன்று காலை நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொதுச் செயலாளர் விஷால் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

None can stop us: Says Vishal

இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறுகையில்,

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நானும், கார்த்தியும் ரூ. 10 கோடி நிதி அளிக்கிறோம். எங்களை யாராலும் தடுக்க முடியாது, ஏறி மிதித்து போய்க் கொண்டே இருப்போம்.

None can stop us: Says Vishal

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும். அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமல் ஆகியோர் பிற்பகலில் வருகிறார்கள் என்றார்.

English summary
Actor Vishal said that no one can stop them. He along with his good friend Karthi are donating Rs. 10 crore for the construction of Nadigar sangam building.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil