»   »  தீபாவளிக்கு என்னென்ன புதுப் படங்கள்? சத்தமில்லாமலிருக்கும் கோலிவுட்!

தீபாவளிக்கு என்னென்ன புதுப் படங்கள்? சத்தமில்லாமலிருக்கும் கோலிவுட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீபாவளிக்கு இன்னும் இருபது நாட்கள்கூட இல்லை. ஆனால் என்னென்ன படங்கள் வரப்போகின்றன என்ற விவரமே தெளிவாகத் தெரியவில்லை.

இந்தத் தீபாவளிக்கு அஜீத்தின் வேதாளம் படம் வரும் என்று நீண்ட நாட்களாகக் கூறி வருகின்றனர்.

ஆனால் இப்போது படம் தீபாவளிக்கு வருவது கடினம் என்ற பேச்சு நிலவுகிறது. இன்னும் பட வேலைகள் முடிந்தபாடில்லை.

None of the biggies confirmed yot for Diwali

தீபாவளிக்கு வருவதாகக் கூறப்பட்ட இன்னொரு படம் கமல் ஹாஸனின் தூங்காவனம். ஆனால் அவர்களும் தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்பு வெளியிடாமல் பட விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

சூர்யா, விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் யாருக்கும் உடனடியாக படம் இல்லை.

கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சிறு முதலீட்டுப் படங்கள் ஏதாவது வந்தால்தான் உண்டு.

English summary
None of the big movies have confirmed their release for the forthcoming Diwali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil