ப்பா.. உடலை ஒட்டிய ஆடை.. கிம் கர்தாஷியனை தூக்கி சாப்பிட்ட பாகுபலி நடிகை.. தீயாய் பரவுது!

மும்பை: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்த பிரம்மாண்ட பாகுபலி படத்தில் குத்தாட்ட பாடலுக்கு நடனமாடிய பாலிவுட் நடிகை நோரா ஃபதேகியின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

சர்வதேச சூப்பர் மாடல் கிம் கர்தாஷியனை போல உடலை ஒட்டியபடி ஆடையை அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் நோரா ஃபதேகி.

Nora Fatehi body hugging dress stuns fans and grabs Kim Kardashian comments

சமீப காலமாக அவர் காட்டி வரும் தாராளத்தால் பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து இந்திய ரசிகர்களும் அவருக்கு தனியாக சங்கமே வைத்து விடுவார்கள் போலத் தெரிகிறது.

பிக் பாஸ் பிரபலம்: சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நோரா ஃபதேகி. கனடா நாட்டில் பிறந்த நோரா ஃபதேகி பாலிவுட், டோலிவுட் படங்களில் தொடர்ந்து ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். 2015 முதல் 2016ம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 9ல் கலந்து கொண்டு 84வது நாளில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், ஏகப்பட்ட ரியாலிட்டி தொடர்களில் பங்கேற்று ரசிகர்களை வசீகரித்துள்ளார்.

Nora Fatehi body hugging dress stuns fans and grabs Kim Kardashian comments

பாகுபலி படத்தில் குத்தாட்டம்: பிரபாஸ் உடன் பாகுபலி படத்தில் இடம்பெற்ற மனோகரி பாடலில் நடு நாயகமாக நின்று குத்தாட்டம் போட்டு டோலிவுட் ரசிகர்களை கிறங்கடித்த நோரா ஃபதேகி ஜூனியர் என்டிஆர் நடித்த டெம்பர் படத்திலேயே ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு தெலுங்கு ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருந்தார்.

Nora Fatehi body hugging dress stuns fans and grabs Kim Kardashian comments

கிம் கர்தாஷியன் போல: 350 மில்லியனுக்கும் மேல் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களை கொண்டுள்ள சர்வதேச சூப்பர் மாடல் கிம் கர்தாஷியன் சமீபத்தில் உடலை ஒட்டியபடி அணிந்திருந்த ஆடையை போல தற்போது அணிந்துக் கொண்டு நோரா ஃபதேகி ஒரு சூப்பரான பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அதற்காக ஷூட்டிங் ஸ்பாட் செட்டில் நோரா ஃபதேகி நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஃபயர் விடும் ரசிகர்கள்: நோரா ஃபதேகியின் கட்டுடலை பார்த்து ரசிகர்கள் வியந்து போய் ஃபயர் எமோஜிக்களை போட்டுத் தாக்கி வருகின்றனர். கார்ஜியஸ் குயின் என்றும் இந்தியாவின் கிம் கர்தாஷியன் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X