அமரன் நடிகை சாய் பல்லவிக்கு ஆப்பு.. ஹிந்தியில் இனி வளர்வது கஷ்டம்தானோ?.. செம பிளான் போடுறாங்களே
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.அக்டோபர் 31ஆம் தேதி அவரது நடிப்பில் அமரன் படம் வெளியாகவிருக்கிறது. முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. எஸ்கே கடைசியாக நடித்த அயலான், மாவீரன் இரண்டு படங்களுமே பெரும் ஹிட்டடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்தோடு போட்டியாக களமிறங்கி பந்தயம் அடித்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயன் அபாரமாக வளர்ச்சி அடைந்துவிட்டார் என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இதற்கிடையே அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கமல் ஹாசன் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

அமரன் ரிலீஸ்: படமானது அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்திய ராணுவத்தின் முன்னாள் வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. நிச்சயமாக இந்தப் படம் சிவாவின் கரியரில் அடுத்தக்கட்ட பாய்ச்சலாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அமரன் பார்த்த ராணுவ வீரர்கள்: இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அமரன் படத்தை ராணுவ உயரதிகாரிகள் சிலரிடம் படக்குழு போட்டு காண்பித்ததாகவும்; அது அவர்களை ரொம்பவே கவர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி முகுந்த் வரதராஜனோடு பணியாற்றியவர்களுக்கும் போட்டு காண்பித்ததாகவும்; அதற்கு அவர்கள் படத்தில் சின்ன சின்ன குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் படத்தை மிக அருமையாக இயக்குநர் உருவாக்கியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.
சாய் பல்லவி பிரச்னை: இதற்கிடையே சாய் பல்லவி சில காலத்துக்கு முன்பு, "காஷ்மீர் ஃபைல்ஸ் என்கிற படத்தை பார்த்தேன். அப்படத்தில் பண்டிதர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை காண்பித்தார்கள். அதேபோல் மாடு வைத்திருந்த ஒரு இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டு கொன்றார்கள். இந்த இரண்டு சம்பவத்துக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. நமது மதத்தின் மேல் இருக்கும் பற்றால் இன்னொருவரை காயப்படுத்தக்கூடாது. பாகிஸ்தான் ராணுவத்தை பொறுத்தவரை இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகள்தான். நாம் எந்த மதத்தை சேர்ந்தவராக இருக்கிறோம் என்பதைவிட அடிப்படையில் நல்ல மனிதராக இல்லாவிட்டால் பயனில்லை" என்று குறிப்பிட்டார். அது அப்போது பிரச்னையான சூழலில் சாய் பல்லவி வருத்தமும் தெரிவித்திருந்தார்.
ஸ்கெட்ச் போட்ட கூட்டம்?: அமரன் படம் ஹிந்தியிலும் ரிலீஸாகவிருக்கும் சூழலில் சாய் பல்லவியின் இந்தப் பழைய பேட்டியை வட மாநிலத்தில் ஒரு தரப்பினர் மீண்டும் ட்ரெண்டாக்கிவருகின்றனர். அதுமட்டுமின்றி இந்திய ராணுவத்தை குறை சொன்ன சாய் பல்லவி நடித்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறிவருகின்றார்கள். முக்கியமாக பல்லவி இப்போது ஹிந்தியில் ராமாயணம் படத்திலும் நடிக்கிறார். எனவே இந்து மதத்தை சேர்ந்தவர்களை கொச்சைப்படுத்திய சாய் பல்லவி ராமாயணம் படத்திலும் நடிக்ககூடாது என்று ஒரு கும்பல் கூறிவருகிறது.
யார் காரணம்?: இதனை கவனித்த தமிழ் ரசிகர்கள் தென்னிந்திய நடிகைகள் ஹிந்தியில் வளரவேக்கூடாது என்று நினைக்கும் ஒரு கூட்டம்தான் இந்த மாதிரியான வேலைகளை செய்துவருகிறது. ஆனால் அதையெல்லாம் மீறி நமது தென்னிந்திய நடிகைகள் கண்டிப்பாக பாலிவுட்டில் தங்கள் கொடியை பறக்கவிடுவார்கள் என்று ஆணித்தரமாக கூறி சாய் பல்லவிக்கு சப்போர்ட் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











