KGF Chapter 2 வெற்றி பெற்ற வயிற்றெரிச்சல் .. கிச்சா சுதீப்புக்கு சபாஷ் சொன்ன பிரபல இயக்குநர்!
பெங்களூரு: இந்தி தேசிய மொழி என நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை கிச்சா சுதீப் சார் என பிரபல இயக்குநர் போட்டிருக்கும் ட்வீட் கன்னட ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேலும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு பொறாமை என்று தனது ட்வீட் மூலம் குறிப்பிட்டு விளாசி உள்ளார் அந்த இயக்குநர்.
இந்தி தேசிய மொழி இல்லை என்றால் உங்கள் தாய் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுறீங்க என கேட்டு சிக்கலில் சிக்கிக் கொண்டார் அஜய் தேவ்கன்.

வெடித்தது சர்ச்சை
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய பிரபல கன்னட ஹீரோ கிச்சா சுதீப் "இந்தி தேசிய மொழி இல்லை" என கன்னட திரைப்பட விழாவில் பேசியதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்தி தான் தேசிய மொழி என அஜய் தேவ்கன் சொல்ல, ஒட்டுமொத்த இந்திய நெட்டிசன்களும் அவருக்கு எதிராக கமெண்ட்டுகளை போட்டு கதற விட்டனர்.

இருவரும் சமாதானம்
கன்னட படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுறீங்க என அஜய் தேவ்கன் கேட்டதும், டென்ஷன் ஆகி பிரச்சனை பெரிதாக்க நினைக்காமல் அவருக்கு தெளிவாக புரிய வைக்க முயன்று பாராட்டுக்களை அள்ளி உள்ளார் கிச்சா சுதீப். மேலும், நமக்குள் ஏன் பிரச்சனை என கிச்சா சுதீப் ட்வீட் போட்டு அஜய் தேவ்கனை அமைதி படுத்தினார்.

சும்மா விடமுடியாது
ஆனால், அஜய் தேவ்கனின் ஆழ் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அவரது தவறான சிந்தனைக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் தொடர்ந்து அஜய் தேவ்கன் போட்ட ட்வீட்டுக்கு எதிராக அவருக்கு பாடம் புகட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராம் கோபால் வர்மா கேள்வி
ரசிகர்கள் மட்டுமின்றி பல ப்ளூ டிக் பிரபலங்களும் நடிகர் அஜய் தேவ்கனுக்கு இந்தி தேசிய மொழி இல்லை என்பதை உரைக்கும் படி எடுத்து உரைத்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு நடிகர் அஜய் தேவ்கனுக்கு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். மேலும், கிச்சா சுதீப் சொன்னதற்கு சபாஷ் சொல்லி உள்ளார்.

வயிற்றெரிச்சல்
கன்னட டப்பிங் படமான கேஜிஎஃப் 2 திரைப்படம் முதல் நாளிலேயே பாலிவுட்டில் 50 கோடிக்கும் அதிகமாகி வசூல் வேட்டை நடத்தியதும், இந்தி படங்கள் முதல் நாளில் 4 கோடி கூட வசூல் செய்ய முடியாத படி தவிப்பதையும் பார்த்துத் தான் பொறாமையில் இப்படி ஒரு ட்வீட்டை அஜய் தேவ்கன் போட்டுள்ளார் என்றும் சாடி உள்ளார் ராம் கோபால் வர்மா.
Recommended Video

400 கோடியை நோக்கி
இந்தி பெல்ட்டிலேயே 400 கோடி ரூபாய் வசூலை நோக்கி கன்னட திரைப்படம் ஒன்று செல்வது ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் எந்தளவுக்கு அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பதன் வெளிப்பாடே அஜய் தேவ்கனின் இந்த ட்வீட் என்றும் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ரன்வே 24 படத்தை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











