நடிகை அனுஷ்கா இல்லையாமே... சீனியர் இயக்குனரின் அந்த பயோபிக் கதையில் சமந்தா நடிக்க போகிறாராம்!

By

சென்னை: நடிகை அனுஷ்கா, நடிக்க இருப்பதாகக் கூறப்பட்ட படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

5வது நாளே இப்படியா.. தம்பியுடன் குடுமி பிடி சண்டையில் குதித்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!

இப்போது வாழ்க்கைக் கதைகளை படமாக்குவது டிரெண்டாகி வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் பிரபலங்களின் வாழ்க்கை கதைகளை படமாக்கி வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கதைகளை சினிமாவாஅக் எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் இயக்குனர்கள்.

நடிகையர் திலகம்

நடிகையர் திலகம்

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, தடகள வீரர் மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் சினிமாகின. இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. சினிமா பிரபலங்களின் கதைகளும் வெளியாகி வெற்றி பெற்றன. சாவித்ரியின் வாழ்க்கை கதையான, நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார், நடிகை கீர்த்தி சுரேஷ்.

பெங்களூர் நாகரத்னம்மா

பெங்களூர் நாகரத்னம்மா

இந்நிலையில் பிரபல கர்நாடக இசைப் பாடகி, பெங்களூர் நாகரத்னம்மாவின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. இவர், மெட்ராஸ் மாகாண தேவதாசிகள் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தவர். திருவையாறில் தியாகராஜர் சமாதியின் மீது கோயில் எழுப்பியவர். தியாகராசர் ஆராதனை விழாவில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தவர். இவரது மூதாதையர்கள் மைசூர் அரசவையில் பாடகர்களாகவும் இசைக்கலைஞர்களாகவும் பணியாற்றியவர்கள்.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

இவரது வாழ்க்கை கதையில், நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த பயோபிக்கில் நடிக்க, நடிகை சமந்தாவிடம் பேசி வருவதாகத் தெரிகிறது. இந்தப் படத்தை பிரபல மூத்த இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்குகிறார். பிரபல தெலுங்கு இயக்குனரான இவர், தமிழில் பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.

3 மொழிகளில்

3 மொழிகளில்

கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமாராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா உட்பட பல படங்களை இயக்கி இருக்கிறார். 'பெங்களூர் நாகரத்தினம்மாவின் வாழ்க்கை கதைக்கான ஸ்கிரிப்ட் ரெடியாகி கொண்டிருக்கிறது. அதற்கு பிறகு யார் நடிப்பது என்பது முடிவாகும். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாக வாய்ப்பிருக்கிறது' என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X