Bossம் இல்லை Puzzleம் இல்லை.. கொஞ்சம் சும்மா இருங்க.. தளபதி 68 டைட்டில் குறித்து அர்ச்சனா ட்வீட்!

சென்னை: தளபதி 68 படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி தீயாக பரவி வரும் ஃபேக் டைட்டிலுக்கு வேட்டு வைத்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பது தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ் மற்றும் பலர் நடித்து வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் பாஸ் மற்றும் Puzzle என இந்த இரண்டில் ஒன்றுதான் என சோசியல் மீடியாவில் சில தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.

Not Boss or Puzzle, Archana Kalpathi clears the air after rumour Thalapathy 68 titles circulate

அது ஃபேக் டைட்டில்: இந்த ஃபேக் டைட்டிலை வைத்து மனோபாலா விஜயபாலன் உள்ளிட்ட விஜய் ஹேட்டர்கள் பாஸ் லாஸ் என காலையிலேயே கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். இதை எல்லாம் உற்றுநோக்கி வந்து அர்ச்சனா கல்பாத்தி தற்போது அந்த இரண்டு டைட்டில் இல்லை என்றும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க வெங்கட் பிரபு சூப்பரான ஒரு விஷயத்தை கிண்டிக் கொண்டிருக்கிறார் என தற்போது பதிவிட்டு ரசிகர்களை தெளிவுபடுத்தி உள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த படத்திற்கு தரமான அப்டேட்களை சரியாக நேரங்களில் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அர்ச்சனா கல்பாத்தி பிரபலமானார்.

புத்தாண்டு பரிசு: மங்காத்தா, மாநாடு வரிசையில் விஜய் நடித்து வரும் 68-வது படமும் ம வரிசையிலான டைட்டில் வைக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. திடீரென பாஸ் தான் படத்தின் டைட்டில் என விஜய் ரசிகர்களே ஃபேன் மேட் போஸ்டர்களை அடிக்க ஆரம்பித்த நிலையில், தளபதி 68 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிரடி விளக்கத்தை கொடுத்து ரசிகர்களை காத்திருக்க சொல்லி உள்ளார்.

வரும் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி மாலை தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் உடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் ஃபேமிலி டிராமாவாக வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை எல்லாம் இந்த படத்தில் வெங்கட் பிரபு விஜய்க்காக செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X